உடனடியாக பணிக்கு திரும்புங்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு அரசு உத்தரவு!

 

உடனடியாக பணிக்கு திரும்புங்கள்: ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு அரசு  உத்தரவு!

ராஜினாமா ஏற்கப்படும்வரை பணியைத் தொடருமாறு ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜினாமா ஏற்கப்படும்வரை பணியைத் தொடருமாறு ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சூர் அருகே புத்தம் பள்ளியைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன். இவர் தற்போது தாதர் – நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தான் ஒரு ஐஏ எஸ் அதிகாரி என்பதை மறைத்து , செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களைப் பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாள்களாக இருந்தார். மக்களோடு மக்களாக களப்பணியாற்றி வந்த இவரை 9 வது நாளில் பிற அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர். இதனால் அவர் வெளியுலகத்திற்கு அறிமுகமாகி பலராலும் பாராட்டப்பட்டார்.

kannan

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியைச் சமீபத்தில் ராஜினாமா செய்தார். சுதந்திரமாகச் செயல்பட முடியாததாலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் தான் ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், அதன் பின்னர் அவரது பணியை தொடரவில்லை என்று கூறப்படுகிறது.

kannan

இதையடுத்து டையு டாமன் பணியாளர்கள் துறை இணை செயலாளர் குர்பிரீத் சிங் இது தொடர்பாக அனுப்பியுள்ள நோட்டீஸில் ராஜினாமா ஏற்கப்படும் வரை, பணியைத் தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நோட்டீஸானது அவர் தங்கியுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஒட்டப்பட்டுள்ளது.