உடனடியாக காலி செய்ய வேண்டும்! – ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு

 

உடனடியாக காலி செய்ய வேண்டும்! – ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் அரசு குடியிருப்பில் வசிப்பதாக 87 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவில், “டெல்லி அரசில் பணியாற்றியபோது ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சிலர் குடியிருப்பதாகத் தெரியவந்துள்ளது

டெல்லியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தங்களுக்கு பணியில் இருக்கும்போது ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் அரசு குடியிருப்பில் வசிப்பதாக 87 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவில், “டெல்லி அரசில் பணியாற்றியபோது ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சிலர் குடியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் உடனடியாக தங்கள் குடியிருப்பை காலி செய்ய வேண்டாம். மேலும் இதுவரை தங்கியிருந்ததற்காக மொத்தம் ரூ.4 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்.

delhi-90

இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் மீது பொது வளாகங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அப்போது 550க்கும் மேற்பட்டோர் அரசு வீடுகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சகம் பதில் தாக்கல் செய்திருந்தது. இதில் கோபமான நீதிபதிகள் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், அவர்களை வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது இந்த உத்தரவை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பிறப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.