உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராமர் கோயிலுக்கு சாதகமாகதான் வரும்- சுப்பிரமணியன் சுவாமி

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராமர் கோயிலுக்கு சாதகமாகதான் வரும்- சுப்பிரமணியன் சுவாமி

ராம் ஜென்மபூமி- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமர் கோயிலுக்கு சாதகமாகத்தான் வரும் என நம்புகிறேன் என்று பா.ஜ. சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர். அவர் பேசினாலே எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல சில நேரம் பா.ஜ.க. கூட அதிரும். தற்போது ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக கருத்தை ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

வழக்கு சம்பந்தப்பட்ட நிலம்

சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது: நவம்பரில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும். ராம் ஜென்மபூமி- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ராமர் கோயிலுக்கு சாதகமாகத்தான் வரும் என நம்புகிறேன். வழிபாட்டு உரிமை என்பது அடிப்படை உரிமை. அதை யாராலும் பறிக்க முடியாது. இறைவன் ராமர் பிறந்த இடத்தில் இருக்கும் கோயிலை யாராலும் அகற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமான பணிகள் நவம்பரில் தொடங்கும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது கவனத்துக்குரியது.