உச்ச நீதிமன்றத்தை மூடுவோம்! – தலைமை நீதிபதி எச்சரிக்கை

 

உச்ச நீதிமன்றத்தை மூடுவோம்! – தலைமை நீதிபதி எச்சரிக்கை

கொரோனா பாதிப்பு காரணமாக பொது மக்கள் ஒன்றாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் கூட மக்கள் வரக்கூடாது என்பதற்காக பிளாட்பார்ஃம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனாவைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கம் போல கூட்டம் அதிகமாக உள்ளதால் உச்ச நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலை வரும் என்று தலைமை நீதிபதி பாப்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பொது மக்கள் ஒன்றாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்களில் கூட மக்கள் வரக்கூடாது என்பதற்காக பிளாட்பார்ஃம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

Sharad Arvind Bobde

இந்த நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றம் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது.
அப்போது நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள், பொது மக்கள் நிரம்பி வழிந்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிக கூட்டம் ஏன்? சுய கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டால் உச்ச நீதிமன்றத்தை மூட வேண்டிய நிலை வரும்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக வந்தவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.