உச்ச நீதிமன்றத்தில் இன்று 11.30 மணிக்கு சிவ சேனா மனு மீது விசாரணை….பா.ஜ.க.வுக்கு முற்றும் நெருக்கடி!

 

உச்ச நீதிமன்றத்தில் இன்று 11.30 மணிக்கு சிவ சேனா மனு மீது விசாரணை….பா.ஜ.க.வுக்கு முற்றும் நெருக்கடி!

மகாராஷ்டிராவில், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க.வுக்கு உத்தரவிடக் கோரி சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டாக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க இருக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தன. ஆனால் சைடு கேப்பில் நேற்று பா.ஜ.க. ஆட்சியை அமைத்து விட்டது. முதல்வராக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவி பிராமணம் எடுத்து கொண்டனர். 

தேவேந்திர பட்னாவிஸ், பகத் சிங் கோஷ்யாரி

இதனை எதிர்த்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மகாராஷ்டிரா கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில சட்டப்பேரவையை நாளை (இன்று) கூட்டி பா.ஜ.க.வை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடக்கோரியும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 11.30 மணிக்கு அந்த மனுவை விசாரணை செய்கிறது. உடனடியாக பெரும்பான்மையை நிருபிக்கும்படி பா.ஜ.க.வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் அது அந்த கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.