உச்சநீதிமன்ற பணியாளருக்கு கொரோனா உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

 

உச்சநீதிமன்ற பணியாளருக்கு கொரோனா உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், அதற்கு இன்னும் முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவிய நபர்கள் இருக்கும் இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. 

ttn

இந்நிலையில் உச்சநீதிமன்ற பணியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 16 ஆம் தேதி காய்ச்சல், இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டள்ளது. இந்நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.