உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்: ‘2.0’ டிரைலர் நாளை முதல்..!

 

உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்: ‘2.0’ டிரைலர் நாளை முதல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் நாளை நவ.3ம் தேதி மதியம் 12 மணிக்கு ரிலீசாகவுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத் புதுவிதமான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டத்தில் டிரைலர் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போதே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் டிரைலரில் உள்ள சிறப்பம்சம் குறித்தும் விளக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதி நவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு புதுவித விஷுவல் ட்ரீட் கொடுத்த நிலையில், டிரைலரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதில் சிட்டி ரோபோவின் பெயரும், ரோபோ பேசும் பஞ்ச் டயலாக்கும் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.