உச்சக்கட்ட ஆபாசம்: எல்லைமீறும் ‘சொப்பன சுந்தரி’ அழகிகள்!

 

உச்சக்கட்ட ஆபாசம்: எல்லைமீறும் ‘சொப்பன சுந்தரி’ அழகிகள்!

சன் குழுமத்தை சேர்ந்த சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியில் ஆபாசம் எல்லைமீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சென்னை: சன் குழுமத்தை சேர்ந்த சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியில் ஆபாசம் எல்லைமீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

புதுப்பொலிவுடன் ஆரம்பமாகியுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ’சொப்பன சுந்தரி’ என்ற நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

மாடல் அழகிகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று இருக்கும் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாடல் அழகிகள் வரைமுறையின்றி அரைகுறை ஆடையுடன், இளைஞர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக வருகின்றனர்.

ஆடைகள் தான் அரைகுறை என்றால் மாடல் அழகிகளின் செய்கைகள் ஆபாசத்தின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் ஃபோட்டோஷூட் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் கூத்துக்கு எல்லையே இல்லை எனலாம். கலாச்சாரத்திற்கு அடையாளமாக திகழும் தமிழகத்தில் டிவி ஷோக்கள் மூலம் இத்தனை ஆபாசம் காட்டுவதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள், நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என போர்க்கொடி எழுந்த நிலையில், ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சிக்கு கட்டாயமாக தடைப்போட வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். குடுபங்கள் பார்க்கும் டிவி ஷோக்களில் இத்தனை ஆபாசம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.