‘உங்க வாழ்க்கையில் இந்த இடத்தைக் கண்டிப்பா போய் பாக்கணும்’ : போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவீவ் கொடுத்த வாலிபர்!

 

‘உங்க வாழ்க்கையில் இந்த இடத்தைக் கண்டிப்பா போய் பாக்கணும்’ : போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவீவ் கொடுத்த வாலிபர்!

தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது எல்லாமே ஆன்லைனில் இருக்கிறது. தெரியாத ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, கூகுள் மேப் உபயோகித்துச் சென்று விடலாம்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது எல்லாமே ஆன்லைனில் இருக்கிறது. தெரியாத ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, கூகுள் மேப் உபயோகித்துச் சென்று விடலாம். இந்த கூகுள் மேப்பில் கீழே நாம் நமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். அதாவது, கூகுள் மேப் நாம் சென்ற அந்த இடம் நன்றாக இருக்கிறதா.. இல்லையா என்பது போன்ற கருத்துகளைப் பதிவிடலாம். இதில் ஸ்டார் வழங்கும் முறையும் உள்ளது. 4 ஸ்டார்களுக்கு மேல் இருந்தால் அந்த இடம் நல்ல இடம் என்று கருதப்படும். 

googlr

ஹோட்டல்களில் தங்குவதற்காகச் செல்லும் அனைவரும் செல்வதற்கு முன்னர் அதன் விமர்சனம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு தான் செல்வர். ஹோட்டல் போன்ற இடங்களுக்கு நாம் விமர்சனம் அளித்துப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு வாலிபர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விமர்சனம் கொடுத்துள்ளார். அது தற்போது இணைய தளங்களில் பரவி வருகிறது. 

review

அந்த வாலிபர் சென்னையில் உள்ள T10 திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு ரிவீவ் கொடுத்துள்ளார். அதில், “ஒரு நாள் இரவு நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது ஆவணங்கள் ஏதும் இல்லாததால் காவலர்கள் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

ttn

அந்த ஸ்டேஷன் மிகவும் சுத்தமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் யாரும் என்னை அடிக்கவோ திட்டவோ இல்லை, என்னிடம் நல்ல படியாக நடந்து கொண்டனர். என்னைப் பற்றிய தகவல்கள் சேகரித்த பிறகு, என்னிடம் இருந்து காசு கூட வாங்காமல் என்னை அனுப்பி விட்டனர். அதனால், நீங்களும் இந்த இடத்தை கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் சென்று பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.