உங்க ராசிய வெச்சு உங்க காதல் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளலாமே!…

 

உங்க ராசிய வெச்சு உங்க காதல் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளலாமே!…

ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் கண்டறிந்து அவற்றை வகுத்துள்ள உங்களோட காதல் மீட்டர் எப்டியிருக்குனு பார்க்கலாமா!

எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒரேமாதிரியாக இருக்காது. அன்பு, பாசம், கோபம், இரக்கம், காதல் என பன்முக உணர்வுகள் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒன்றுபோல இருக்கும் என ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் கண்டறிந்து அவற்றை வகுத்துள்ளனர். உங்களோட காதல் மீட்டர் எப்டியிருக்குனு இப்ப பார்க்கலாமா!…

மேஷம் :

mesha rashi

மேஷ ராசிக்காரர்கள் காதல் மேட்டரில் கில்லாடிகளாக இருப்பார்கள். பார்த்தால் பசுபோல பம்முவார்கள். பேச ஆரம்பித்தால் காளைகள் போல துள்ளுவார்கள்.

காதல் கசாமுசாக்களில் நாட்டமில்லாதவர் போல பாசாங்கு காட்டினாலும் காதலிக்கத் தகுந்தவர்கள். கட்டாயம் காதலிக்கப்படுவார்கள். ஆனாலும் திருப்தியடையாத புத்திக்காரர்கள். 

ரிஷபம் :

rishaba rashi

ரிஷப ராசிக்காரர்கள் காதல் விஷயங்களில் சொக்குப்பொடியை ஹோல்சேல் விற்பனை செய்பவர்கள். பழகத் தொடங்கிவிட்டால் தாங்கள் நினைத்தவர்களை அலேக்காக வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள்.

காதலில் பசப்ப மாட்டார்கள். உண்மையான, தூய்மையான காதலராக இருப்பார்கள். காதல் கிறக்கத்தினாலேயே தாம்பத்தியத்தில் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம் :

mithunam

மிதுன ராசிக்காரர்களுக்கும் கலைத்துறைக்கும் ரொம்பவே ராசிப்பொருத்தம் உண்டு. பெரும்பாலானாவர்கள் நல்ல எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையிலோ இருப்பார்கள். ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்திழுக்கும் திறன் படைத்தவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் தம்மைத் தாமே அதிகம் நேசிப்பவர்கள். அதனாலேயே எதிர்பாலரிடம் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். காதலுக்கும் இவர்களுக்கும் சற்று ஏழாம் பொருத்தம் என்றாலும், துலாம் ராசிக்காரர்களுடன் இயல்பாக ஒத்துப்போவார்கள்.

மணமுடித்தால் திருப்திகரமான தாம்பத்தியம் விளங்கும். தவிர, மகரம், மேஷ ராசிக்காரர்கள் இந்த மிதுன ராசிக்காரர்களை கவர்வார்கள். பலநேரங்களில் அது காதலில் சென்று முடியாமல் போகும்.

கடகம் : 

kadaka rashi

கடக ராசிக்காரர்களா!… காதலுக்கு கப்சிப். காதல்-ங்குற வார்த்தையக் கேட்டாலே ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்துல வர்ற நடிகர் கமல் மாதிரி உவ்வே என்று சொல்வார்கள். செட்டே ஆகாது. குழந்தைகள், சொந்தபந்தங்கள் மீது பாசம் வைத்திருப்பார்கள்.  

இவர்களுக்கு சாப்பாடும், ‘மேற்படி சமாச்சாரமும்’ ஒன்றுதான். மிதமிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் என்ற நினைப்புக்காரர்கள். இதனாலேயே கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்களின் சுய மரியாதை பல நேரங்களில் சீண்டலுக்கு ஆளாக நேரிடும்.

யதார்த்தமாகப் பழக முடியாது. இதையெல்லாம் மீறி கடக ராசிக்காரர்களும் சில சமயங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்களை காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் : 

simma rashi

யாரையும் ‘பச்சக்’கென எளிதில் காதல் வசப்படுத்தும் இயல்புடைய சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்தான விஷயம். மாவீரன் நெப்போலியனைப் போல காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவார்கள். காதல் திருமணம் செய்யும் யோகம் நிறையவே உண்டு. 

இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும்; தித்திக்கும் தேனுக்காக மலர் விட்டு மலர் தாவும் வண்டுகள் போல!

எது சரி, எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக்கான எண்ணம் அதிகமாகவே இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.

சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். தமது காதலரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வசமாக வைத்திருக்கும் திறனுள்ளவர்கள்.  

கன்னி :

kannai rashi

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். 

இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர்.

விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசிக்காரர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் :

thulam rashi

யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. 

காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் :

virchigam rashi

விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பர்.

மணிக்கணக்காக காத்திருந்து கிலோ மீட்டர் கணக்கில் பின்தொடர்ந்து பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தெல்லாம் பெண்களை கவர்ந்திழுக்க மாட்டார்கள். தான் பின்தொடர்வதைவிட தன்னை நோக்கி நாடும் பெண்கள் வேண்டும் என்று நினைப்புடையவர்கள். அதனாலேயே பல நேரங்களில் காதல் கைகூடாமல் போய்விடும். வயசு ஆக ஆக இவர்களது காதல் ஃபீவர் வைரலாக விறுவிறுக்கும்.

காதல் உணர்வுகள் பொங்கி வழியும். ‘மூடி’ பேர்வழிகள். அவர்களையே அவர்கள் பெரிதும் விரும்புவார்கள். சில நேரங்களில் சைய்யென்று தன்னையே நொந்து கொள்வார்கள். இருந்தாலும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்கள். காதல், தாம்பத்தியம் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.

கொஞ்ச வயதில் தடுமாற்றம் இருந்தாலும் காலப்போக்கில் காதல், தாம்பத்திய சமாச்சாரங்களில் நன்றாகவே தேறி விடுவார்கள். துணையை சந்தேகிக்கும் கெட்ட குணம் இவர்களுக்கு இருந்தாலும் அமைதியாக வாழ்க்கையே நடத்துவார்கள்.
 
தனுசு :

dhanush rashi

தனுசு ராசிக்காரர்கள் நூற்றுக்கு தொன்னூற்றியொன்பது சதவீதம் வெற்றியில்தான் முடியும். காதலில் திறமைசாலியாக விளங்குவார்கள். இவர்களது காதல் லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாகவே  மெனக்கெடுவார்கள். ஆயுசில் பாதியை காதலுக்காகவே செலவழிக்கும் பேர்வழிகள். 

சில சமயம் அமைதியோ அமைதியாக இருப்பார்கள். திடீரென ஆக்ரோஷமாகிவிடுவார்கள். இருந்தாலும் பாதகம் இல்லாதவர்கள். காதல் எண்ணத்தில் அதிகம் ஆழ்ந்திருப்பார்கள்.  துணையை மிகவும் நேசிப்பார்கள்.  

அதிக அன்பு செலுத்துவார்கள். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்வது நலமாக இருக்கும். மேஷ ராசிக்கார்களுடன் டக்கென காதல் வயப்படுவர்கள்.

மகரம் :

magara rashi

மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம், சாப்பாடு இல்லாவிட்டாலும் சரி. காதல் மட்டும் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் பெண்ணாக  இருந்தால் அவரது அன்பு வெளிப்பாடு குறைவாக இருக்கும்.

ஆண்களோ காதல் உணர்வு சொட்ட சொட்ட வலம் வருவார்கள். அழுத்தமான காதல் இருக்கும். யாரையும் நம்பிவிடும் மனம் படைத்தவர்கள்.

தனுசு ராசிக்காரர்களுடன் கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் :

kumbam rashi

காதலில் உண்மையாக இருப்பார்கள் கும்ப ராசிக்காரர்கள்.  அதற்காக காதலே வாழ்க்கை என்றெல்லாம்  கண்மூடித்தனம் காட்டமாட்டார்கள். காதலைப் பற்றி இவர்களது கற்பனை சுவாரஸ்யமாகவே இருக்கும். இவர்களது காதலுணர்வு விதவிதமான ரசனையோடு இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர்.

காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். சில நேரங்களில் கும்ப ராசிக்காரர்களின் காதல் ஏறுக்குமாறாக அமைந்து விடும். உத்தமாக நல்ல வேலையில் சேர்ந்தபிறகு, கும்ப ராசிக்காரர்களின் காதலை ஏற்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொள்வது உசிதமாகும்.

மீனம் :

meena rashi

மீன ராசிக்காரர்களுக்கு காம இச்சை அதிகம் இருக்கும்.  அதனாலேயே அன்பும், பொறுமையும் நிறையவே காட்டுவார்கள். இவர்களது வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருக்கும். இயற்கை விரும்பிகள். தன்னை நேசிப்பவர்களை இவர்கள் மிகவும் மதித்து ஆழ்ந்து நேசிப்பார்கள்.  நற்குணம்  படைத்தவர்கள்.

ரகசிய வாழ்வை பற்றி யோசிக்க மாட்டார்கள். பிடித்துவிட்டால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்கள். அன்புக்காக எதையும் இழக்கத் துணிவார்கள். இவர்களுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கும் திருமணம் நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டாகும்.