உங்க பாதங்களுக்கேற்ற மரத்தை வணங்கினால் அப்புறம் வாழ்க்கையில் உச்சம் தான் 

 

உங்க பாதங்களுக்கேற்ற மரத்தை வணங்கினால் அப்புறம் வாழ்க்கையில் உச்சம் தான் 

ஒருத்தருடைய நட்சத்திரத்திற்கு உரிய மரங்களை வளர்த்தால் சகல தோஷங்களும் விலகிடும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.

ஒருத்தருடைய நட்சத்திரத்திற்கு உரிய மரங்களை வளர்த்தால் சகல தோஷங்களும் விலகிடும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி மரம் வளர்க்க நினைப்பவர்கள் உங்களின் நட்சத்திரத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், நீங்கள் எந்த பாதம் என்பதையும் தெரிந்து, உங்கள் பாதத்திற்குரிய மரத்தை வளர்த்தால் உங்கள் வாழ்வில் செல்வம் கொழிக்கும். செல்வம் மட்டுமல்லாமல், உங்கள் பாதத்திற்குரிய விருட்சத்தை தினந்தோறும் வணங்கி வந்தாலே வாழ்வில் பிரச்சனைகள் தலை தூக்காது. தெய்வீக சக்தியும், காந்த சக்தியும் கிடைக்கும். வாழ்வில் இதுநாள் வரையில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.

ஒவ்வொருவருடைய நட்சத்திர பாதத்திற்கும் வலுவை சேர்க்கிற ஒவ்வொரு மரம் இருக்கிறது. அந்த பாதத்திற்குரிய மரம் வளரும் போது அதனை வைத்தவர்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். பொதுவாக மரத்திற்கு அதிக சத்தி இருக்கிறது. அதனால்தான் தெய்வங்கள் தவம் செய்யும் போது, தன் ஆற்றலால் தவம் செய்யும் இடத்திற்கு மேற்கூரை அமைக்காமல் மரங்களின் நிழலில் தவம் செய்தார்கள். 

மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு புன்னை மரம்தான் தலவிருட்சம். பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து புன்னைமரத்தின் நிழலில் தவம் இருந்தபோது, சிவபெருமான் அதே புன்னைமரத்தில் காட்சி தந்து அருள் புரிந்தார். இப்படி இறைவன் விரும்பி வாசம் செய்யும் இடம் மரத்தின் நிழலில் தான். அதனால்தான் ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒவ்வொரு தலவிருட்சம் இருக்கிறது.  ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனி தனி பாதங்கள் இருக்கிறது. அதாவது, முதல் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று பாதங்கள் இருக்கிறது. ஒருவேளை அந்த பாதங்கள் பலவீனமாக அமைந்துவிட்டால், அந்த நட்சத்திரம் நமக்கு கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்காமல் தாமதம் செய்யும். அப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கும் ஆற்றல் நட்சத்திர மரங்களுக்கு இருக்கிறது. 
டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக, உங்கள் நட்சத்திரத்திற்கும் பாதங்களுக்கும் ஏற்ற மரம் எது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். 

நட்சத்திர அடிப்படையில் வளர்க்க வேண்டிய அல்லது பிறருக்கு தானம் கொடுக்க வேண்டிய மரசெடி வகைகள்

அஸ்வினி
1 ம் பாதம் – எட்டி மரம்
2 ம் பாதம் – மகிழம் மரம்
3 ம் பாதம் – பாதாம் மரம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு மரம்

பரணி
1 ம் பாதம் – நெல்லி மரம்
2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு மரம்
3 ம் பாதம் – விளா மரம்
4 ம் பாதம் – நந்தியாவட்டை மரம்

கார்த்திகை
1 ம் பாதம் – அத்தி மரம்
2 ம் பாதம் – மணிபுங்கம் மரம்
3 ம் பாதம் – வெண் தேக்கு  மரம்
4 ம் பாதம் – நிரிவேங்கை மரம்

ரோகிணி
1 ம் பாதம் – நாவல் மரம்
2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை மரம்
3 ம் பாதம் – மந்தாரை மரம்
4 ம் பாதம் – நாகலிங்கம் மரம்

மிருக சீரிடம்
1 ம் பாதம் – கருங்காலி மரம்
2 ம் பாதம் – ஆச்சா மரம்
3 ம் பாதம் – வேம்பு மரம்
4 ம் பாதம் – நீர்க்கடம்பு மரம்

திருவாதிரை
1 ம் பாதம் – செங்கருங்காலி மரம்
2 ம் பாதம் – வெள்ளெருக்கு மரம்
3 ம் பாதம் – வெள்ளெருக்கு மரம்
4 ம் பாதம் – வெள்ளெருக்கு மரம்

புனர்பூசம்
1 ம் பாதம் – மூங்கில் மரம்
2 ம் பாதம் – மலைவேம்பு மரம்
3 ம் பாதம் – அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி மரம்

பூசம்
1 ம் பாதம் – அரசு மரம்
2 ம் பாதம் – ஆச்சா மரம்
3 ம் பாதம் – இருள் மரம்
4 ம் பாதம் – நொச்சி மரம்

ஆயில்யம்
1 ம் பாதம் – புன்னை மரம்
2 ம் பாதம் – முசுக்கட்டை மரம்
3 ம் பாதம் – இலந்தை மரம்
4 ம் பாதம் – பலா மரம்

மகம்
1 ம் பாதம் – ஆலமரம்
2 ம் பாதம் – முத்திலா மரம் 
3 ம் பாதம் – இலுப்பை மரம்
4 ம் பாதம் – பவளமல்லி மரம்

பூரம்
1 ம் பாதம் – பலா மரம்
2 ம் பாதம் – வாகை மரம்
3 ம் பாதம் – ருத்திராட்சம் மரம்
4 ம் பாதம் – பலா மரம்

உத்திரம்
1 ம் பாதம் – ஆலரி மரம்
2 ம் பாதம் – வாதநாராயணன் மரம்
3 ம் பாதம் – எட்டி மரம்
4 ம் பாதம் – புங்கமரம் மரம்

அஸ்தம்
1 ம் பாதம் – ஆத்தி மரம்
2 ம் பாதம் – தென்னை மரம்
3 ம் பாதம் – ஓதியன் மரம்
4 ம் பாதம் – புத்திரசீவி மரம்

சித்திரை
1 ம் பாதம் – வில்வம் மரம்
2 ம் பாதம் – புரசு மரம்
3 ம் பாதம் – கொடுக்காபுளி மரம்
4 ம் பாதம் – தங்க அரளி மரம்

சுவாதி
1 ம் பாதம் – மருதம் மரம்
2 ம் பாதம் – புளி மரம்
3 ம் பாதம் – மஞ்சள் கொன்றை மரம்
4 ம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை மரம்

விசாகம்
1 ம் பாதம் – விளா மரம்
2 ம் பாதம் – சிம்சுபா மரம்
3 ம் பாதம் – பூவன் மரம்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி மரம்

அனுஷம்
1 ம் பாதம் – மகிழம் மரம்
2 ம் பாதம் – பூமருது மரம்
3 ம் பாதம் – கொங்கு மரம்
4 ம் பாதம் – தேக்கு மரம்

கேட்டை
1 ம் பாதம் – பராய் மரம்
2 ம் பாதம் – பூவரசு மரம்
3 ம் பாதம் – அரசு மரம்
4 ம் பாதம் – வேம்பு மரம்

மூலம்
1 ம் பாதம் – மராமரம்
2 ம் பாதம் – பெரு மரம்
3 ம் பாதம் – செண்பக மரம் 
4 ம் பாதம் – ஆச்சா மரம்

பூராடம்
1 ம் பாதம் – வஞ்சி மரம்
2 ம் பாதம் – கடற்கொஞ்சி மரம்
3 ம் பாதம் – சந்தானம் மரம்
4 ம் பாதம் – எலுமிச்சை மரம்

உத்திராடம்
1 ம் பாதம் – பலா மரம்
2 ம் பாதம் – கடுக்காய் மரம்
3 ம் பாதம் – சாரப்பருப்பு மரம்
4 ம் பாதம் – தாளை மரம்

திருவோணம்
1 ம் பாதம் – வெள்ளெருக்கு மரம்
2 ம் பாதம் – கருங்காலி மரம்
3 ம் பாதம் – சிறுநாகப்பூ மரம்
4 ம் பாதம் – பாக்கு மரம்

அவிட்டம்
1 ம் பாதம் – வன்னி மரம்
2 ம் பாதம் – கருவேல் மரம்
3 ம் பாதம் – சீத்தா மரம்
4 ம் பாதம் – ஜாதிக்காய் மரம்

சதயம்
1 ம் பாதம் – கடம்பு மரம்
2 ம் பாதம் – பரம்பை மரம்
3 ம் பாதம் – ராம்சீதா  மரம்
4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் – தேமா மரம்
2 ம் பாதம் – குங்கிலியம் மரம்
3 ம் பாதம் – சுந்தரவேம்பு மரம்
4 ம் பாதம் – கன்னிமந்தாரை மரம்

உத்திரட்டாதி
1 ம் பாதம் – வேம்பு மரம்
2 ம் பாதம் – குல்மோகர் மரம்
3 ம் பாதம் – சேராங்கொட்டை மரம்
4 ம் பாதம் – செம்மரம் 

ரேவதி
1 ம் பாதம் – இலுப்பை மரம்
2 ம் பாதம் – தங்க அரளி மரம்
3 ம் பாதம் – செஞ்சந்தனம் மரம்
4 ம் பாதம் – மஞ்சபலா மரம்