உங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா? உஷாரா இதப்படிங்க…

 

உங்க கிட்னி சரியாக வேலை பாக்குதா? உஷாரா இதப்படிங்க…

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது உடலுறுப்புகளும் தனது செயலை திறம்பட செய்ய வேண்டும்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது உடலுறுப்புகளும் தனது செயலை திறம்பட செய்ய வேண்டும். அதிலும் சிறுநீரகம் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் ரத்தத்தில் நச்சுக்கள் கலந்து உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். எனவே நமது சீறுநீரக செயலை அடிக்கடி கண்காணித்து வருவது மிகவும் முக்கியம். நம் சிறுநீரகம் சரியாகத்தான் செயல்படுகிறதா என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

sleepless

தூக்கம் கெடும்: 

உங்கள் உடலில் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும் மிகப்பெரிய வேலையை செய்வது சிறுநீரகம் தான். இந்த சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் நச்சுக்கள் தேங்கி தூக்கமின்மை ஏற்படும். இன்ஸோமேனியா போன்ற தூக்கமின்மை பிரச்னையால் நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்

headache

சோர்வு, தலைவலி, வலுவிழப்பு:

நமது சிறுநீரகம் தான் விட்டமின் டி யை எரித்ரோபயோடினாக மாற்றுகிறது. இந்த எரித்ரோபயோடின் தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் எரித்ரோபயோடின் அளவு குறைந்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியும் குறைந்து விடும். ரத்த சிவப்பணுக்கள் தான் உடலுறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சப்ளை செய்கிறது. ஆக்ஸிஜன் சரிவர கிடைக்கவில்லை என்றால் தசைகள் மற்றும் மூளைகள் சோர்வடைய ஆரம்பித்து விடும்.

அனீமியா:

நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை இருந்தால் 20-25% அனிமியா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் அறிகுறிகளாவன: சோர்வு, தூக்கம், முகத்தில் வெள்ளை புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

அரிப்பு, வறண்ட சருமம்: 

சிறுநீரகம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி ஆரோக்கியமான உடலை நமக்கு தருகிறது.  சிறுநீரகம் சரிவர செயல்பட விட்டால் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் தாதுக்கள் கிடைக்காமல் சருமத்தில் அரிப்பு மற்றும் வறட்சி ஏற்படும்.
இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்ற தீவிர பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

துர்நாற்றம்:

உங்கள் சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் நீங்கள் எப்பொழுது உணவருந்தினாலும் வாயில் தாதுக்கள் வாசனை வீசும். மேலும் கெட்ட சுவாசம் ஏற்படும். இதற்கு காரணம் உங்கள் உடலில் தங்கும் நச்சுக்கள் தான். இதனால் இந்த வாசனையை தாங்க முடியாமல் குறைவாக சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். இதனால் உடல் நலமும் ஆரோக்கியமற்று காணப்படும். எடை இழப்பு ஏற்படும். எனவே உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

breathetrouble

மூச்சு விட சிரமம்: 

மூச்சு விடுதல் குறைந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இதற்கு காரணம் நமது உடலில் உள்ள நீர்ச்சத்து சிறுநீரகம் பிரித்தெடுக்க முடியாமல் நுரையீரலுக்கு சென்று விடுவதால் ஏற்படுகிறது

முழங்கை, பாதம், கால்களில்வீக்கம்: 

சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால் பாதங்கள், கைகள் வீங்கத் தொடங்கி விடும். நீர்ச்சத்து அதிகமாக வெளியேறாமல் சோடியம் சமநிலையின்மை ஏற்பட்டு உடலில் நீர் தேக்கம் ஏற்பட ஆரம்பித்து விடும். கால்களில் உள்ள சிரை குழாய்களில் பிரச்னை, கல்லீரல் மற்றும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

backpain

முதுகுவலி: 

உங்கள் சிறுநீரகம் சரிவர செயல்படாவிட்டால் நச்சுக்கள் வெளியேறாமல் முதுகு வலி மற்றும் கால்வலி போன்றவை ஏற்படும். இதை பாலிசிஸ்டிக் கிட்னி டிஸீஸ் என்கின்றனர். இந்த வலி அப்படியே தண்டுவடத்தில் தொடங்கி இடுப்பு பகுதி வரை தொடரும்.

காய்ச்சல்: 

சிறுநீரகம் செயல்படாத சமயத்தில் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இதற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பதை தவிர்த்து உடனே மருத்துவரை சந்தியுங்கள்

வீங்கிய கண்கள்: 

கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் காணப்படும். இதற்கு காரணம் புரோட்டீனை சரிவர சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் உடல் முழுவதும் பரவி விடும். எனவே அதிகமான புரோட்டீன் உடலில் தங்குவதால் கண்களை சுற்றி வீக்கம் ஏற்படும். எனவே இதை மருத்துவரை அணுகி ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரில் உள்ள குளோபுலின் அளவை பரிசோதித்து கொள்ளுங்கள்.

bp

ரத்த உயர் அழுத்தம்: 

சிறுநீரக செயலிழப்பால் நமது கழிவு அமைப்புக்கும் ரத்த ஓட்ட அமைப்புக்கும் இடையே ஒரு பெரிய இடையூறு ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் வேலையை செய்கிறது. ரத்த குழாய்கள் பாதிப்படைந்து விட்டால் சிறுநீரக நெப்ரானுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்லாது. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரக செயலிழப்பிற்கு காரணமாக அமைகிறது.

சிறுநீரில் மாற்றம்: 

சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை எனில் வெளியேற்றப்படும் சிறுநீரின் நிறம், மணம் மாறுதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற எண்ணம் வந்தால் அதுவும் சிறுநீரக பிரச்சினையை குறிக்கிறது. ஒரு நாளைக்கு 4-10 தடவை சிறுநீர் கழிக்கலாம்.

நுரையுடன் கூடிய சிறுநீர்: 

சிறுநீர் கழிக்கும் போது அதிகமான நுரை தென்பட்டால் சிறுநீரில் புரோட்டீன் அதிகளவு உள்ளதை குறிக்கிறது. நீங்கள் சில சமயங்களில் வேகமாக சிறுநீர் கழிக்கும் போது கூட நுரை ஏற்படலாம். எனவே சந்தேகம் தீர வேண்டும் என்றால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள்.

pee

ரத்தத்துடன்சிறுநீர்: 

சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தால் அது ஹீமத்யூரியா என்று அழைக்கப்படுகிறது. இது உங்களுக்கு தீவிர பாக்டீரியா தொற்று இருப்பதை குறிக்கிறது. எனவே உடனே மருத்துவரை அணுகி சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

ஸ்லீப் அம்னியா: 

நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை ஸ்லீப் அமினியாவை ஏற்படுத்தும். தூங்கும் போது மூச்சு திணறல் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.