‘உங்க கதையில நீங்க தான் ஹீரோ; நீங்க தான் வில்லன்’ : ஜனனி கூறியது யாரை தெரியுமா?

 

‘உங்க கதையில நீங்க தான் ஹீரோ; நீங்க தான் வில்லன்’ : ஜனனி கூறியது யாரை தெரியுமா?

 பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

 பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

janani

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம் இந்த ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான  யாஷிகா மற்றும் மகத் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்திருந்தனர். 

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது சீசன் போட்டியாளர்களான ரித்விகா மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர்  வருகின்றனர்.அப்போது முகினிடம் பேசும் ஜனனி, போறதுக்குள்ள நீங்க எனக்கு கைவினை பொருள் ஏதாவது  ஒன்னு செஞ்சிகுடுக்கணும் என்று கேட்கிறார். அதன்பிறகு ஹவுஸ்மேட்ஸிடம் எல்லாரும் யுனிக்கா இருக்கீங்க என்று சொல்லும் ஜனனி லிவிங் ஏரியாவில் அனைவர் மத்தியிலும் பேசுகிறார். அதில் தர்ஷன் கோல் மாறாம அப்படியே டிராவல்  பண்ணுறீங்க என்று பாராட்டுகிறார். தொடர்ந்து கவினிடம், அடிவாங்குனது நான் தான்; அதனால கோப்பை  எனக்கு தான் என்று சொல்லி கலாய்க்கும் ஜனனி, உங்க கதையில நீங்க தான் ஹீரோ; நீங்க தான் வில்லன் என்று சொல்ல அசடு வழிகிறார் கவின்.