‘உங்க ஏரியாவில் பவர்கட்டா? இப்படி செய்தால் உடனே பவர் கிடைச்சுடும்!

 

‘உங்க ஏரியாவில் பவர்கட்டா? இப்படி செய்தால் உடனே பவர் கிடைச்சுடும்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிறைய இடங்களில் மழையின் காரணமாக அடிக்கடி பவர் கட் ஆவதும், மின்சாதனங்கள் பழுதாவதும், மின் கம்பங்கள் தண்ணீரில் விழுவதும், தேங்கி நிற்கும் மழைத் தண்ணீரில் மின் கசிவு ஏற்படுவதுமாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிறைய இடங்களில் மழையின் காரணமாக அடிக்கடி பவர் கட் ஆவதும், மின்சாதனங்கள் பழுதாவதும், மின் கம்பங்கள் தண்ணீரில் விழுவதும், தேங்கி நிற்கும் மழைத் தண்ணீரில் மின் கசிவு ஏற்படுவதுமாக இருக்கிறது. அனைத்து வேலைகளையும் அரசாங்க ஊழியர்களே பார்க்க முடியாது. உங்கள் கண்களில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்களோ, மழை நீரில் படுகின்ற வகையில் டிரான்ஸ்பார்மர்களோ இருந்தால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

powercut

அதன்படி தமிழகம் முழுவதுமாக மின்தடை தொடர்பான பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக  தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் எண்களைக் கொடுத்திருக்கிறார்கள். 
இது தவிர, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல இடங்களில் மின்சாரம் இன்றி தவிக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. அது மாதிரியான சமயங்களிலும் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இனி பவர் கட் போன்ற பிரச்சனைகளுக்காக 1912 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் மின்வாரிய தலைவர் புகார் மைய எண்களான 044-2852 4422 மற்றும் 044-2852 1109 எண்களுக்கு அழைத்துப் புகரைத் தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்க 9445850811 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அமைச்சரின் முகாம் அலுவலக எண்ணான 044-2495 9525 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தடையின்றி புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்து உள்ளார்.