‘உங்க உறவால தான் தர்ஷன் வெளியே போனான்’: மீண்டும் கலவரத்தை தூண்டும் வனிதா

 

‘உங்க உறவால தான் தர்ஷன் வெளியே போனான்’: மீண்டும் கலவரத்தை தூண்டும் வனிதா

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல்  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல்  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  

sherin

மேலும்  பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று சாக்ஷி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன்  ஆகியோர்  ஆகியோர் வந்துள்ளனர்.  

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல்  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் பேசும் வனிதா ஷெரினிடம் , ‘தர்ஷன் நீ பழகுறத வைச்சு நான் அந்த வார்த்தையை சொன்னது வந்து மக்களுக்கு நான் போன அப்போ புரியல. ரெண்டு வாரம் கழிச்சு புரிஞ்சிருக்கு. அதோட பிரதிபலிப்பு தான் தர்ஷன் வெளியே போனது என்று கூறுகிறார். இதைக்கேட்டு சாக்ஷி, இதை என்னால ஏத்துக்க முடியாது என்று வனிதாவிடம்  மல்லுக்கட்ட, நீ எத பார்த்துட்டு பேசிட்டு இருக்க? நான் பொய் சொல்லுறேனா? என்று கேட்கிறார்.

sakshi

அதற்கு சாக்ஷி, நீங்க சொல்லுறதால, பொய் உண்மை ஆகாது; உண்மை பொய் ஆகாது என்று வாதம் செய்கிறார். இதைக்கேட்டு கடுப்பான ஷெரின் அழுதுகொண்டே, தர்ஷன் வெளியே போனதுக்கு நான் தான் ரீசன்னு வனிதா சொல்லுறா! என்று கூறி கஸ்தூரியிடம் அழுகிறார். இதனால் மற்றவர்கள் அனைவரும் அமைதியில் உறைந்து போயுள்ளனர்.