உங்க இஷ்டத்துக்கு நாங்க நடந்துக்க முடியாது! முருகதாஸை விளாசிய உயர்நீதிமன்றம்

 

உங்க இஷ்டத்துக்கு நாங்க நடந்துக்க முடியாது! முருகதாஸை விளாசிய உயர்நீதிமன்றம்

நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் கடந்த மாதம் வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற  நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது.  இதன் பின்னர்  ரஜினியின் தர்பார் படம் தமிழகத்தில்  எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை அதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறியதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்க ரஜினி மற்றும் இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸை சந்திக்க முயற்சி செய்தனர். அப்போது ஏ.ஆர். முருகதாஸ் காவல்துறையை வைத்து மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ar murugadoss

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. மிரட்டல் விடுக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் இயக்குனர்கள் சங்கத்திடம் கடிதம் அனுப்பியுள்ளதாக முருகதாஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது முருகதாஸ் அளித்த புகாரில் 15 பேர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பியது. தர்பார் பட நஷ்ட விவகாரம் காரணமாக விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.