உங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது ரொம்ப சிம்பிள்!?

 

உங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது ரொம்ப சிம்பிள்!?

பெரும்பாலான மக்கள் வாக்குவம் கிளீனர்கள் வாங்கியதே கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளேதான்.அதிலும் தேவை கருதி வாங்கியவர்களை விட அதை விற்பதற்காக வீடு வீடாக ஏறி இறங்கும் இளைஞர்களின் முகத்துக்காக வாங்கியவர்களே அதிகம்.

பெரும்பாலான மக்கள் வாக்குவம் கிளீனர்கள் வாங்கியதே கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளேதான்.அதிலும் தேவை கருதி வாங்கியவர்களை விட அதை விற்பதற்காக வீடு வீடாக ஏறி இறங்கும் இளைஞர்களின் முகத்துக்காக வாங்கியவர்களே அதிகம்.

அப்படி வாங்கிய வாக்குவம் கிளீனர்,காலத்தின் தேவை கருதி பயன் பாட்டில் இருக்கிறது என்றால் இது உங்களுக்கான செய்திதான்.இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் வாக்குவம் கிளீனர் ரொம்பவே அட்வான்ஸ்ஸாகவும் எளிதில் கையாளக்கூடிய வகையில் எடை குறைவாகவும் இருக்கும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த மாடல்கள் எடை அதிகமாக இருக்கும்.தவிர, இப்போது வரும் மாடல்களில் இருப்பதுபோல் ஃபில்டரை சுலபமாக கழட்டி க்ளீன் பண்ணக்கூடிய வகையில் பழைய மாடலில் இருக்காது! அப்போது வாங்கிய வாக்குவம் க்ளீனரோடு பல்வேறு உபகரணங்களை கொடுத்திருப்பார்கள்.அதோடு சேர்த்து,இப்போது மளிகை கடைகளில் பொருட்களை கட்டித்தரும் ஒரு காகிதக் கவர் மாதிரி ஒன்றையும் அப்போது கொடுத்திருப்பார்கள்.

இந்த காகிதக் கவர்கள் கொஞ்சம் விசேடமானவை.அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்துளைகள் இருக்கும்.உங்கள் வாக்குவம் கிளீனர் வீட்டின் மூலை முடுக்குகளில் உள்ள தூசுகளை உறிஞ்சி காற்றோடு சேர்த்து இந்த காகித கவருக்குள் சேர்க்கிறது.உள்ளே வரும் குப்பை தங்கிவிடும் காற்று கவரில் இருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிவிடும்.

அவர்கள்  முதன் முறை கொடுக்கும் கவர்கள் தீர்ந்ததும் மார்க்கெட்டில் போய் கேட்டால்,’ஸாரி பாஸ், இப்ப எங்க வாக்குவம் கிளீனரை  அப்டேட் பண்ணிட்டோம்.உங்களுடையது பழைய மாடல் அதனால நீங்கள் ஏன் புதுசா வந்திருக்கிற மெசினை ட்ரை பண்ணிப்பார்க்கக்கூடாது’ மறுபடியும் ஒரு மெசினை நம் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.புதிய மெஷின் வாங்கினாலும் ஒரு முறை அவர்கள் தரும் ஃபில்டர்ஸ்  தீர்ந்து விட்டால் மீண்டும் பழைய கதைதான்.

bags

அந்த பிரச்சினையைத் தீர்க்க எளிதான வழி இருக்கிறது.தற்போதைய சூழலில் பிளாஸ்டிக் கவர்கள் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்டது உங்களுக்கு தெரியும்.அதன் காரணமாக இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் தேங்காயும் குங்கும டப்பாவும் போட்டுக் கொடுக்கும் சிறிய பைகளை பார்த்திருக்கிறீர்களா!?

காகிதம் போலவும் இல்லாமல் துணி போலவும் இல்லாமல். இருக்கும் இந்த பைகளுக்கு பெயர் Non woven bags.இந்தப் பைகளிலும் நாம் முதலில் சொன்னது போல கண்ணுக்குத்தெரியாத நுண் துளைகள் இருக்கின்றன!இந்தப் பைகளைத் தூரப்போடாமல் உங்கள் வாக்குவம் கிளீனரில் காகிதக்கவர் பொருத்தும் இடத்தில் இதைப் பொருத்தி மெஷினை ஆன் செய்யுங்கள்.

அருமையாக இயங்கும்.இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வாக்குவம் கிளீனரை மாற்ற வேண்டாம்.இதை உங்கள் தாத்தா காலத்தில் வாங்கிய பெரிய பக்கெட் போலிருக்கும் மெஷின்களிலும் மாட்டலாம்.ஒரே விஷயம் கொஞ்சம் பெரிய சைஸ் பைகளாக தேடவேண்டும் அவ்வளவுதான்.