உங்கள் முதல் தீர்ப்பு என்ன? கமல்ஹாசன் பேச்சுக்கு பின்னால் ஏதாவது மர்மம் உள்ளதா?

 

உங்கள் முதல் தீர்ப்பு என்ன? கமல்ஹாசன் பேச்சுக்கு பின்னால் ஏதாவது மர்மம் உள்ளதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார கடைசிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை:  பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார கடைசிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  

நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் இவர்கள் சண்டை போடுவதை பார்த்தால் ஒரு மாதம் ஆனாது போல் உள்ளதே என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இரண்டாவது வாரம் என்பதால் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், கமல்ஹாசன் உண்மை முகங்களைக் காட்டச் சொன்னோம், அதுக்காக இப்படியா காட்டு, காட்டுனு காட்டுவது, காட்டிட்டீங்களே…  7 பேரை நாமினேட் செஞ்சி வெச்சிருக்கீங்க’ என்றார். 

அதைத்தொடர்ந்து ரசிகர்களை பார்த்து, ‘அவங்க தான் அப்படியென்றால், நீங்க 10கோடி வாக்கு அளித்து உங்க பவர் என்னனு காண்பித்துள்ளீர்கள்’  என்று பேசியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமல், தனது அரசியல் குறித்த பேச்சுக்காக இந்த மேடையை நன்றாக பயன் படுத்திக்கொள்கிறார்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.