உங்கள் மார்பகத்தின் சைஸ் என்ன? நெட்டிசனுக்கு விஜே அஞ்சனாவின் செருப்படி பதிவு!

 

உங்கள் மார்பகத்தின் சைஸ் என்ன?  நெட்டிசனுக்கு விஜே அஞ்சனாவின் செருப்படி பதிவு!

குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இறங்கிய அஞ்சனாவை அவரது ரசிகர்கள் மிஸ் செய்ததாகப் பதிவு வெளியிட்டு வந்தனர்.  

தமிழ் சின்னதிரையில் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா. அதையடுத்து கடந்த  2016 ஆம் ஆண்டு  நடிகர் கயல் சந்திரனை காதலித்து கரம் பிடித்தார்.

ttn

இதனால் சின்னதிரையை விட்டு விலகியிருந்த அஞ்சனாவுக்கு சமீபத்தில் ஆண்  குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனால்  குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இறங்கிய அஞ்சனாவை அவரது ரசிகர்கள் மிஸ் செய்ததாகப் பதிவு வெளியிட்டு வந்தனர்.  

ttn

இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் மியூஸிக்கிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக மாறினார்.  சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா தனது புகைப்படங்களையும் இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்,

ttn

இந்நிலையில் அஞ்சனா சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் , உங்கள் மார்பகத்தின் சைஸ் என்ன அநாகரிகமாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு கொஞ்சமும் அச்சப்படாமல் பதிலளித்த அஞ்சனா, பட்டாணி அளவு கொண்ட உன்  மூளையை விட கொஞ்சம் பெரிது தான் பதிலடி கொடுத்துள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த நபரை வசைபாடியும், அஞ்சனாவை பாராட்டியும் வருகிறார்கள்.