‘உங்கள் நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள் சின்மயி’ : வரம்பு மீறிய நெட்டிசனுக்கு சின்மயி அனுப்பியது இதுதான்!

 

‘உங்கள் நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள் சின்மயி’ : வரம்பு மீறிய நெட்டிசனுக்கு சின்மயி அனுப்பியது இதுதான்!

பாடகி சின்மயிடம் அவருடைய நிர்வாண புகைப்படங்களைக்  கேட்ட நபருக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை:  பாடகி சின்மயிடம் அவருடைய நிர்வாண புகைப்படங்களைக்  கேட்ட நபருக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

chimayi

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய போது, ஆரம்பக் காலத்தில் தான் சந்தித்த பிரச்னைகளை சின்மயியும் பகிர்ந்தார். தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் கிளப்பினார்.

chinmayi

இந்நிலையில் தொடர்ந்து சமூகவலைதள  பக்கத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் குறித்து கருத்து பதிவிட்டு இவரை வலைதள வாசிகள் சிலர் வம்பிழுப்பது உண்டு. அந்த வகையில், நெட்டிசன் ஒருவர், ‘உங்களுடைய நியூட்’ புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்க, இதைக் கண்டு அதிர்ச்சியடையாத சின்மயி ‘நியூட்’ என்ற மேக்கப் சாதன நிறுவனத்தின்  பொருட்களின் புகைப்படங்களைப் பதிவு செய்து இவையெல்லாம் என்னுடைய ஃபேவரைட் நியூட் என்று பதிலடி கொடுத்துள்ளார். 

 

சின்மயி -ன் இப்பதிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சின்மயி-ன் நியூட் புகைப்படம் கேட்ட அந்த நபரோ பதிவை நீக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

 

முன்னதாக உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட சின்மயி-ன் கோரிக்கை காவல்துறையினரால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.