உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற வளம் தரும் வழிபாட்டு தலம் எது?

 

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற வளம் தரும் வழிபாட்டு தலம் எது?

ஸ்ரீ ஜடா முனி பைரவர் – புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

நமது தீவினைகளையும், எதிரிகளின் தொல்லைகளையும் அழித்து வாழ்வில் வளம் தருபவர் பைரவர். டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக 27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவர் யார் என்பதனையும், அவர் கோவில் கொண்டுள்ள ஸ்தலங்களின் தகவல்களையும் தருகிறோம். உங்கள் நட்சத்திரத்திற்கேற்ப பைரவரை வழிபட்டு வாழ்வில் வளம் காணுங்கள்.

1. அஸ்வினி
ஸ்ரீ ஞான பைரவர் – கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

2. பரணி 
ஸ்ரீமகா பைரவர் – திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3. கார்த்திகை 
ஸ்ரீ சொர்ண பைரவர் – திருவண்ணாமலை.

4. ரோகிணி
ஸ்ரீகால பைரவர் -பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5. மிருகசீரிஷம்
ஸ்ரீ சேத்திரபால பைரவர் – சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6. திருவாதிரை
ஸ்ரீவடுக பைரவர் – ஆண்டாள் கோவில் (பாண்டிச் சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)

7. புனர்பூசம்
ஸ்ரீவிஜய பைரவர் -பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.

8. பூசம்
ஸ்ரீ ஆவின் பைரவர் – (திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9. ஆயில்யம்
ஸ்ரீ பாதாள பைரவர் – காளஹஸ்தி.

10. மகம்
ஸ்ரீநர்த்தன பைரவர் -வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11. பூரம் 
ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12. உத்திரம் 
ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13. அஸ்தம் 
ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14. சித்திரை 
ஸ்ரீ சக்கர பைரவர் – தர்மபுரி- மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15. சுவாதி 
ஸ்ரீ ஜடா முனி பைரவர் – புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16. விசாகம்
ஸ்ரீ கோட்டை பைரவர் – திருமயம்.

17. அனுஷம்
ஸ்ரீ சொர்ண பைரவர் –  கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18. கேட்டை
ஸ்ரீகதாயுத பைரவர் – சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

19. மூலம்
ஸ்ரீ சட்டநாதர் பைரவர் – சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20. பூராடம்
ஸ்ரீகால பைரவர் – அவிநாசி – அவிநாசியப்பர் கோவில்.

21. உத்திராடம்
ஸ்ரீவடுகநாதர் பைரவர் – கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22. திருவோணம்
திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர் – வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23. அவிட்டம்
சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி .

24. சதயம்
ஸ்ரீசர்ப்ப பைரவர் – சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25. பூரட்டாதி
கோட்டை பைரவர் – ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.

26. உத்திரட்டாதி
ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர் – சேங்கனூர் – சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27. ரேவதி
ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர் – தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.