உங்கள் சிலிண்டரில் எரிவாயு கசிகிறதா?.. இதோ உங்களுக்கான தீர்வு..!

 

உங்கள் சிலிண்டரில் எரிவாயு கசிகிறதா?.. இதோ உங்களுக்கான தீர்வு..!

சிலிண்டர்களில் வாஷர் என்ற மூடி சரியாக பொருந்தவில்லை என்றாலோ அல்லது வாஷர் சேதம் அடைந்து இருந்தாலோ எரிவாயுக் கசிவு ஏற்படும்.

சிலிண்டர்களில் வாஷர் என்ற மூடி சரியாக பொருந்தவில்லை என்றாலோ அல்லது வாஷர் சேதம் அடைந்து இருந்தாலோ எரிவாயுக் கசிவு ஏற்படும். இந்த கசிவு, சில சமயங்களில் சிலிண்டரை வெடிக்க செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதனால், விநியோகம் செய்பவர்கள் அதனைச் சோதித்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் ஆகிய சிலிண்டர் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்கள் அறிவுறுத்தியிருந்தன. 

சிலிண்டர்

இருப்பினும், தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களின் எடை குறைவாக இருப்பதாகவும், வாஷர் சரியாக உள்ளதா என்பதை சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் சோதித்துப் பார்க்காமல் விநியோகிக்கின்றனர் என்ற புகார் மக்களிடம் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை சரிசெய்ய, எரிவாயு நிறுவனங்கள் மின்னணு முறையில் சிலிண்டர்களை பரிசோதனை செய்து விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளன. 

சிலிண்டர்

மின்னணு பரிசோதனையில் சிலிண்டரின் எடை, எரிவாயு கசிவு, வாஷர் பொருத்தம் போன்றவற்றை மின்னணு கருவி துல்லியமாகக் கணித்து விடும் என்றும் இந்த மின்னணு பரிசோதனை இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலிண்டரை பெரும் வாடிக்கையாளர்களும் வாஷர், எடை குறித்துப் பரிசோதித்து வாங்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.