உங்கள் சர்க்கரை ரேஷன் கார்டை இந்த தேதிக்குள் அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் !

 

உங்கள் சர்க்கரை ரேஷன் கார்டை இந்த தேதிக்குள் அரிசி ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் !

பொது விநியோக சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 10,19,401 குடும்ப அட்டைகள் உள்ளது.

பொது விநியோக சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 10,19,401 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் வருமானத்திற்கு ஏற்றார் போல 5 வகையாக வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது, பச்சை அட்டைகளுக்கு அரிசி வழங்கப் படாது.

ration card

வெள்ளை அட்டைகளுக்கு அரிசியைத் தவிர மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இந்த அட்டைகள் சர்க்கரை அட்டைகள் என்றும் அழைக்கப் படுகின்றன. மூன்றாவது காக்கி அட்டைகள், இதற்கு அனைத்து பொருட்களும் வழங்கப்படும். நான்காவது வனத்துறை அதிகாரிகளுக்கான நீல அட்டைகளாகவும், ஐந்தாவது பொருட்கள் இல்லாத அட்டைகள் வழங்கப்படுகின்றன. 

ration card

இதில், சர்க்கரை அட்டை வைத்திருக்கும் மக்கள் நீண்ட காலமாகச் சர்க்கரை அட்டைகளை அரிசி வாங்கும் அட்டைகளாக மாற்றித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சர்க்கரை அட்டைகளை மாற்றுவது குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

minister kamaraj

 அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் கீழ், சர்க்கரை அட்டைகள் வைத்திருக்கும் மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளின் தகுதியின் படி அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு, உங்கள் குடும்ப அட்டையின் நகலை இணைத்து இன்று (19.11.2019)  முதல் 26.11.2019 ஆம் தேதி வரை  www.tnpds.gov.in   என்ற இணையதளத்தில் மாற்ற விண்ணப்பிக்கலாம். அல்லது, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்த குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு சர்க்கரை அட்டைகள் மாற்றம் செய்து தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.