உங்கள் குழந்தைகள் தலை வலிக்கிறது என்று சொன்னால்… அலட்சியப் படுத்த வேண்டாம்..! ?

 

உங்கள் குழந்தைகள் தலை வலிக்கிறது என்று சொன்னால்… அலட்சியப் படுத்த வேண்டாம்..! ?

பெரியவர்களுக்கு மட்டும் தான் தலைவலி வருமென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறியவர்களுக்கு,குழந்தைகளுக்கும் கூட தலைவலி வரும் என்பதுதான் சமீபத்திய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி உண்மை! பெரியவர்களுக்கு தலைவலி வந்தால் நாம் அதனை வெளிப்படுத்திவிடுகிறோம். ஆனால் சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட தலைவலி  வரும். ஆனால் அவர்களால் அதை உணர்ந்துகொள்ளவோ வெளிப்படுத்தவோ தெரியாது.

பெரியவர்களுக்கு மட்டும் தான் தலைவலி வருமென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறியவர்களுக்கு,குழந்தைகளுக்கும் கூட தலைவலி வரும் என்பதுதான் சமீபத்திய ஆய்வு சொல்லும் அதிர்ச்சி உண்மை! பெரியவர்களுக்கு தலைவலி வந்தால் நாம் அதனை வெளிப்படுத்திவிடுகிறோம். ஆனால் சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட தலைவலி  வரும். ஆனால் அவர்களால் அதை உணர்ந்துகொள்ளவோ வெளிப்படுத்தவோ தெரியாது. பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு படிப்பு சுமை, தேர்வுகள், வீட்டு பாடம், ப்ராஜக்ட் ஒர்க் என்று அவர்கள் மீது திணிக்கப்படும் பணி சுமைகளால் அவர்களுக்கும் தலைவலி வருவது இன்றைய காலகட்டத்தில் வெகு சாதாரணம்.

child-stress

ஒரு சில குழந்தைகள் அதை உணர்ந்து கொண்டு “அம்மா… தல வலிக்குது…ம்மா“ என்று சொல்வதும் உண்டு. பெரும்பாலான பெற்றோர்கள், “இந்தவயசுல உனக்கென்ன தலைவலி”  என்று குழந்தைகளின் பிரச்சினைகளை அலட்சியமாக டீல் பண்ணுகிறார்கள். அது ரொம்ப தவறு தலைவலி யாருக்கு வேண்டுமானாலும் வரும். தலைவலிகளில் பலவிதம் உள்ளன… சில தலைவலிகளை அலட்சியப்படுத்தினால் அவை உங்கள் குழந்தையின் மரணத்தில் கொண்டு போய் நிறுத்தவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் சொல்லும் தலைவலிகளின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆய்வுகளின்படி  பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில்  75% பேர்  தலைவலி பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்களாம். அதில் 10% பேர் ரெகுலர் மற்றும் கடுமையான தலைவலிக்கு  உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1.மைகிரேன்:(Migraine)

headache-03

உலக சுகாதார அமைப்பான WHO-னின் கருத்துப்படி மைக்கிரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலிதான் மிகவும் கொடுமையானது.இது குழந்தைகளை நிம்மதியாகவே இருக்க விடாது.அவர்களின் வேலையை ஈடுபாட்டோடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் சோர்வாகவே வைத்திருக்கும்.இந்த ஒற்றைத் தலைவலி பெரியவர்களுக்கு வந்தாலே தாங்க மாட்டார்கள் என்பதை பலர் கண்கூடாகப் பார்த்திருக்க முடியும். 

இதன் அறிகுறிகள்:
பயங்கரமான தலைவலி 
வாந்தி,வாந்தி வரும் உணர்வு 
வயிற்றுவலி 
வெளிச்சம்,சத்தத்திற்கு மிகவும் சென்சிட்டிவிட்டி இருக்கும்.

2.டென்ஷனால் உண்டாகும் தலைவலி:

headache-01

இந்தத்  தலைவலி, பெரியவர்களை விட டீனேஜ் குழந்தைகளையே அதிகம் தாக்கும்..இது அதிகமான டென்சன் மற்றும் பலவீனத்தால் ஏற்படும் தலைவலி. இது ரத்த ஓட்டத்தை தாக்கி தலை மற்றும் கழுத்து பகுதிகளில் வலியை உண்டாக்கும்.

அறிகுறிகள்:

இரண்டு நெற்றிகளிலும் வலி ஏற்படும்.
தலை மற்றும் கழுத்து பகுதிகளில் தசைகள் கடினமாகும்.

3.கிளஸ்டர் தலைவலி:(Cluster headache)

இந்த வகையான தலைவலி ஒரு நாளைக்கு ஐந்திற்கும் மேற்பட்ட முறை வலி உண்டாகும்.மேலும் இந்த வலி 15 நிமிடங்களிலிருந்து 3 மணிநேரத்திற்கு நீடித்திக்கும்.

அறிகுறிகள்:

கடுமையான ஒற்றை தலைவலி ,மூக்கடைப்பு, கண்களில் தண்ணீர்,சோகம், கலக்கம் ஆகியவை இருக்கும்.இப்படி தலைவலிகள் குழந்தைகளுக்கு மேற்கூறியபடி பல விதங்களில் உண்டாகும்.அவை வெவ்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும்.அவை; காலமாற்றத்தினால் உண்டாகும் நோய்த்தொற்று,வைரல் இபெக்ட்க்ஷன்ஸ்,டான்சிலைடிஸ்,நீண்ட நாள் இருக்கும் சைனஸ் இபெக்ட்ஷன் போன்றவை முதல் காரணம்.

child-stress

ஸ்ட்ரெஸ், மயக்கம், தூக்கமின்மை, அதிகப்படியான உடல் வலி, அதிக நேரம் டிவி பார்ப்பதாலும், வீடியோ கேம் விளையாடுவதாலும், புத்தகம் படிப்பதாலும் ஏற்படும் கண் வலி.

தலை காயம், கட்டி  ஆகியவை. எமோஷனல் ஸ்ட்ரெஸ், அதிகப்படியான ப்ரெஸ்ஸர். மூளை இபெக்ட்ஷன்ஸான மினைங்கிட்டீஸ் மற்றும் என்செபலாலிட்டிஸ்.(Meningitis and encephalitis)

நீண்ட  நாள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உணவில் சேர்க்கப்படும் ப்ரிசர்வேட்டிவ்  நைட்ரைட்/MSG ஆகியவைகளால் ஏற்படும் ஒவ்வாமை.
பசி, டீஹைடைரக்ஷன் ஆகியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைத்துவிடும்.

குழந்தைகள்  தலைவலி என்று சொன்னதும், குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்துச்  செல்லாமல் பொதுவாகவே பல பெற்றோர்கள் தங்களுக்காக வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளையே குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தான பழக்கம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தலைவலிகளை  எளிதில் குணப்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொண்டால் பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய் விட வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் இனிமேல் உங்களிடம் தலை வலிக்கிறது என்று சொன்னால் அலட்சியப்படுத்த வேண்டாம்.