உங்கள் எஜமானார் கட்சியை எதிர்க்க துணிவு இருக்கிறதா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

 

உங்கள் எஜமானார் கட்சியை எதிர்க்க துணிவு இருக்கிறதா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

ராஜபக்சேவை டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சிதானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ராஜபக்சேவை டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சிதானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர், ஈழ இறுதிப்போரின் போது இந்திய அரசு உதவியதாக கூறினார். அவரது கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அப்போதைய மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகித்திருந்ததால், திமுக – காங்கிரஸை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 

 

இந்நிலையில், அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்!

ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.