உங்கள் ஊரில் நோய் பரவாதா? தள்ளி நிற்க சொன்னதால் நடந்த கொலை!

 

உங்கள் ஊரில் நோய் பரவாதா? தள்ளி நிற்க சொன்னதால் நடந்த கொலை!

அப்போது தேவராஜ் தான் கேரளாவில் இருந்து வந்ததாக கூற இதை கேட்ட ஜோதிமணி அங்கு கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது

உதகையை அடுத்துள்ள நொண்டிமேடு பகுதியை சார்ந்தவர் ஜோதிமணி. இவர் உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழில் செய்து வரும் இவர்  சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.

tt

அப்போது அங்கு கேரளாவை சேர்ந்த தேவராஜ் என்பவரும் வந்துள்ளார். அப்போது தேவராஜ் தான் கேரளாவில் இருந்து வந்ததாக கூற இதை கேட்ட ஜோதிமணி அங்கு கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது.. கொஞ்சம் தள்ளி நில்லு என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ் அங்கிருந்த  வெங்காயம் வெட்டும்  கத்தியை எடுத்து உங்கள் ஊரில் நோய் பரவாதா? எனக் கூறி ஜோதிமணியை கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதனால் ஜோதிமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

ttn

உடனே அங்கிருந்தவர்கள்  ஜோதிமணியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அவர் செல்லும் வழியிலேயே  உயிரிழந்துள்ளார். இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.