உங்களை எல்லாம் அந்த கூகுளாண்டவர்தான் காப்பாத்தணும்!

 

உங்களை எல்லாம் அந்த கூகுளாண்டவர்தான் காப்பாத்தணும்!

பிரியாணிக்கு செலவு செய்த 100 ரூபாயும் போய், கூடவே இவர் அக்கவுண்டில் இருந்த பணத்தையும் அவன் காலி பண்ணிவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறான். கண்ணால் காண்பதும் பொய், கூகுளில் தேடிகிடைப்பதும் பொய், தீர விசாரிக்கவில்லையெனில் நம் பணம் யாருக்கோ மொய்!

முன்பெல்லாம் வீட்டில் ஏதேனும் விலையுயர்ந்த  பொருட்களோ, ஆடோ, மாடோ, கோழியோ காணாமல்/திருடுபோனால், அதற்கென இருக்கும் ஸ்பெஷலிஸ்ட்களான வெற்றிலையில் மைபோட்டுப் பார்க்கும் மந்திரவாதிகளிடம் சென்று காணாமல் போன பொருள் இருக்கும் இடம் குறித்து கேட்டு வருவார்கள். இப்போது டெக்னாலஜி காலத்திலும் அப்படி செய்ய முடியுமா என்ன? உடனடியாக கூகுளை நாடி அங்கேயே தேடுகிறார்கள். அக்கா தங்கைக்கு வரன் வேண்டுமா? கூகுள். வாடகைக்கு வீடு வேண்டுமா? கூகுள்.

Google produces wrong Zomato number

இப்படி எல்லாவற்றுக்கும் கூகுளை நாடியே பழக்கப்பட்ட பெங்களூர்வாசி ஒருவர், சொமோட்டோவில் பிரியாணி ஆர்டர் செய்திருக்கிறார். பிறகுதான் ஞாபகத்துக்கு வருகிறது அது சனிக்கிழமை என்று. உடனடியாக கேன்சல் செய்து பணத்தை திரும்ப கேட்க, சொமோட்டோவின் வாடிக்கையாளர் எண்ணை கூகுளில் தேடியிருக்கிறார். கூகுளும் நல்ல பிள்ளை மாதிரி ஒரு எண்ணைக் காட்ட, அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே அந்த எண்ணை கூகுளில் பதிவு செய்திருந்து காத்திருந்த ஹேக்கர், இவரிடம் ஓ.டி.பி. உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கேட்க, இவரும் சமர்த்தாக சொல்லியிருக்கிறார். பிரியாணிக்கு செலவு செய்த 100 ரூபாயும் போய், கூடவே இவர் அக்கவுண்டில் இருந்த பணத்தையும் அவன் காலி பண்ணிவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறான். கண்ணால் காண்பதும் பொய், கூகுளில் தேடிகிடைப்பதும் பொய், தீர விசாரிக்கவில்லையெனில் நம் பணம் யாருக்கோ மொய்!