‘உங்களுடனேயே இருக்கிறோம்…என்றும் உங்களுடன் இருப்போம்’ நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி!

 

‘உங்களுடனேயே இருக்கிறோம்…என்றும் உங்களுடன் இருப்போம்’ நடிகர் சதீஷ்  நெகிழ்ச்சி!

ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

ttn

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகர் சதீஷ் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து நடிகர் சதீஷ்  தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வாழ்வின் மிகச்சிறந்த புத்தாண்டு என் தலைவருடன்…உங்களைப் பார்த்துத் தான் வளர்ந்தோம். இன்று உங்களுடனேயே இருக்கிறோம். என்றும் உங்களுடன் இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.