‘உங்களுக்கு வீடியோ..எங்களுக்குக் குறும்படம்..: மீரா முகத்திரையைக் கிழித்த கமல்! 

 

‘உங்களுக்கு வீடியோ..எங்களுக்குக் குறும்படம்..: மீரா முகத்திரையைக் கிழித்த கமல்! 

பிக் பாஸ் 3யில் நேற்றைய  எபிசோடில் மீராவின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

சென்னை : பிக் பாஸ் 3யில் நேற்றைய  எபிசோடில் மீராவின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ளது. நேற்று வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்யுடன் விவாதித்தார். அப்போது அதில் வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மிக முக்கியமான பிரச்சினை மீரா, சேரன் மீது வைத்த குற்றச்சாட்டு தான். 

கிராமிய டாஸ்க்கில் சேரன், தன்னை இழுத்து தள்ளி விட்டதாக மீரா பகிரங்கமாக குற்றம் சாட்டியது ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி  மத்தியிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.  மீரா தனக்கு நடந்த அநீதியைத் தெரிந்து கொள்ள வீடியோவை பார்த்தால் போதும் என்று கூறியிருந்தார்.இதனால் மீராவுக்கு வீடியோவும், மக்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்க்கு குறும்படத்தை கமல்ஹாசன் ஓட்டிக்காட்டினார். 

meera

அதில் தெளிவாக விளையாட்டு போக்கில் நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதை ஏற்க மறுத்த மீரா வழக்கம் போல் தனது தவறை உணராமல் பேசிக்கொண்டே இருந்தார்.