‘உங்களுக்கு நிறைய செய்வேன்!’ – டெல்டா மாவட்ட மக்களிடம் உருகிய சசிகுமார்

 

‘உங்களுக்கு நிறைய செய்வேன்!’ – டெல்டா மாவட்ட மக்களிடம் உருகிய சசிகுமார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களைச் சந்தித்து நடிகரும், இயக்குநருமான சசிகுமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களைச் சந்தித்து நடிகரும், இயக்குநருமான சசிகுமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கஜா புயலில் சிக்கி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக சீரழிந்துள்ளன. அவற்றின் ஒரு பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளை நடிகர் சசிகுமார் பார்வையிட்டதோடு மட்டுமின்றி, வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் அன்போடு ஆறுதல் தெரிவித்தார்.

sasikumar

இரண்டு நாட்களாக அங்கு தங்கியிருக்கும் நடிகர் சசிகுமார், வீழ்ந்து கிடக்கும் வீடுகளையும், சாய்ந்து கிடக்கும் தென்னைகளையும் பார்த்து கண் கலங்கினார். அப்போது அவரை நெருங்கிய பெண் ஒருவர், “நாங்க பிள்ளையாக வளர்த்த தென்னையும் போச்சு, வாழ்ந்த வீடும் போச்சு. இனி நாங்க என்ன செய்யப்போறோம் எனத் தெரியலை. இதில் இருந்து மீண்டு வர பல வருடம் ஆகும்” என அழுதபடி கூறினார். அவருக்கு ஆறுதல் கூற முடியத நிலையில் தவித்த சசிகுமார், “நான் மீண்டும் திரும்பி வருவேன். உங்களுக்கு நிச்சயமா பெரிய அளவில் செய்வேன். நம்பிக்கையோடு இருங்க” என ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் இருக்கும் சசிகுமார், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள நிகழ்வு, அவரின் மனிதாபிமானத்தை உணர்த்துவதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.