உங்களுக்கு இவ்ளோ நீளமான கூந்தல் வேணுமா? இத ட்ரை பண்ணுங்க…

உங்களுக்கு இவ்ளோ நீளமான கூந்தல் வேணுமா? இத ட்ரை பண்ணுங்க…

இந்த காலத்துப் பெண்களுக்குக் கூந்தலில் எண்ணெய்ப்பசையே தெரியாமல் இருக்க, பளபளவென பறந்து கொண்டிருக்க வேண்டும். என்ன ஹேர் ஸ்டைல் செய்தாலும் அதற்கு தங்களுடைய கூந்தல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இதே அந்த காலத்துப் பெண்கள், தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அது கூந்தலை வறண்டு போகவிடாமல் காக்கும்.

கூந்தல் ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவுக்கு வளரும் தன்மையுடையது. அதற்குப் போதிய அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது. அப்படி தலைமுடிக்கு ஊட்டமளித்து, தலைமுடியை வளர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

hair

தலைக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலைத் தேய்க்க வேண்டும்.அப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி ஊட்டம்பெற்று நன்கு செழித்து வளரும்.

தேங்காய்ப்பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்துத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.

hair

நம்முடைய உடலைப் போன்றே கூந்தலுக்கும் போதிய ஓய்வு வேண்டும். எந்நேரமும் கூந்தலை கோதிக்கொண்டோ வாரிக்கொண்டோ இருக்கக்கூடாது. வீட்டில் இருக்கும்போதும் இரவு நேரங்களிலும் தலையில் பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

கறிவேப்பிலையும் கீரை வகைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

hair

பேரிச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது கூந்தலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.

சீயக்காய்ப்பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்யக்கூடியது. பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். கூந்தல் செழித்து வளருவதற்கு சீயக்காய் குளியல் மிக அவசியம்.