உங்ககிட்ட இது இரு தரப்பு விவகாரம்ன்னு சொல்றாங்க! நாங்க கேட்டா அது எங்க பிரச்சினைன்னு சொல்றாங்க- புலம்பும் இம்ரான் கான்

 

உங்ககிட்ட இது இரு தரப்பு விவகாரம்ன்னு சொல்றாங்க! நாங்க கேட்டா அது எங்க பிரச்சினைன்னு சொல்றாங்க- புலம்பும் இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா சர்வதேச சமுதாயத்திடம் அது இரு தரப்பு பிரச்சின்னு சொல்றாங்க, அதேசமயம் நாங்க கேட்டா அது எங்க உள்விவகாரம்ன்னு சொல்றாங்க என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சி.என்.என். நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் இருதரப்பு விவகாரம்ன்னு அவர் (மோடி) தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் நாங்கள் பேச முயற்சி செய்தால் எங்களது தனிப்பட்ட விவகாரம்ன்னு சொல்றார். அதனால்தான் நாங்கள் உலக முழுவதும் முறையீட்டு வருகிறோம்.

ஐ.நா. லோகோ

எனது சுற்றுப்பயணத்தின்போது, காஷ்மீர் நிலவரம் குறித்து உலக தலைவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் காஷ்மீர் விவகாரத்துக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் 120 கோடி மக்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் பல என்ற கண்ணோட்டத்தில் இந்தியாவை பார்க்கிறார்கள். மனிதர்களை காட்டிலும் பொருட்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஆனாலும் இறுதியாக மற்றும் எனது நம்பிக்கையின்படி, இந்த பயணத்தின் மூலம் சாதித்தேன் என நான் நினைக்கிறேன். சர்வதேச சமுதாயம் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும். காஷ்மீர் விவகாரம் வெடிக்கும் நிலைக்கு செல்வதால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா ரொம்ப மாறி விட்டது. எதிர்காலத்தில் இன்னும் வேகமாக மாறும என பயப்படுகிறேன். அதனால் தான் அதனை சமாதானப்படுத்த கூறுகிறேன். உலகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.