ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்., லிஸ்டில் இணைந்த டி.டி.வி.தினகரன்… குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்..!

 

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்., லிஸ்டில் இணைந்த டி.டி.வி.தினகரன்… குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்..!

மாறி மாறி அறிக்கை விட்டு இருகட்சிகளும் தவித்து வருகின்றன. ஆகையால், அதிமுகவுக்கு ஒரு பக்க மத்தாளம் என்றால் திமுகவுக்கு இரு புறமும் மத்தாளம்..!

‘இடைத்தேர்தலை நினைத்து மூன்று டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி என மூவரும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ttv

வாக்காளர்களுக்கு ‘ப’ விட்டமின் கொடுத்து சமாளிக்க முடியாது. முன்பை விட  இப்போது எதிர்பார்ப்பு பல மடங்கு வாக்காளர்களிடம் அதிகரித்து இருக்கிறது. அதனால், முக்கிய தலைவர்கள் சீட் கேட்க தயங்குகிறார்கள். அதாவது தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹெச்.வசந்தகுமார் கடந்த மே மாதமே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவி காலியானால் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி நாங்குநேரி தொகுதிக்கு வருகிற நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்தத் தொகுதியில் ஏற்கனவே பனங்காட்டுப்படை கட்சி போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளரையும் அறிவித்து விட்டது.ttv

தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது. அ.ம.மு.க திருநெல்லை மாவட்டத்தில் சுருண்டு போன போதிலும் கட்சிக்கு சின்னம் கிடைத்தால் போட்டியிடுவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஆனால், ஆளுங்கட்சியான அதிமுக மட்டும் இடைத்தேர்தலை கண்டு பதுங்குகிறது. இடைத்தேர்தல் முடிவு எப்படி வருமோ, என்பது தான் அந்தத் தயக்கத்திற்கு காரணம். 

இதனால், தேர்தல் அறிவிக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என சைலண்ட் மோடில்மூடில் அந்த மூவரும்  உள்ளனர். இடைத்தேர்தல் முடிவு பாதகமாக வந்தால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமே என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இங்கு இப்படி என்றால், திமுகவின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. நாங்கூரமிட்டுள்ள  தி.மு.க -காங்கிரஸ் நட்பில் நாங்குநேரி விரிசலை ஏற்படுத்தி விடும் எனக்கூறப்படுகிறது. ஏற்கெனவே அங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.stalin

இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது கதர் கட்சி வட்டாரம். ஆனால், கூட்டணி கட்சியான திமுக இந்த முறை தங்களது கட்சி வேட்பாளரை நிறுத்த ஒற்றைக்காலில் நின்று துடிக்கிறது. இன்னும் மாறி மாறி அறிக்கை விட்டு இருகட்சிகளும் தவித்து வருகின்றன. ஆகையால், அதிமுகவுக்கு ஒரு பக்க மத்தாளம் என்றால் திமுகவுக்கு இரு புறமும் மத்தாளம்..!