ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை : ஈஷா யோகா மையம் விளக்கம்!

ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை : ஈஷா யோகா மையம் விளக்கம்!

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கோவை ஈஷா யோகா  மையத்தில் சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். 

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கோவை ஈஷா யோகா  மையத்தில் சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். 

இதனிடையே  டெல்லி  மாநாட்டைத் தொடர்ந்து, கொரோனா  அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

There are no positive cases of coronavirus at Yoga Center in Coimbatore, says Isha foundation

இந்நிலையில் இதுகுறித்து ஈஷா யோகா மையம் அளித்துள்ள விளக்கத்தில், ” ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை.வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரியில் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை பார்வையிட்டனர்” என்று கூறியுள்ளது. 

ttn

முன்னதாக, ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் 150 பேருக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில்  யாருக்கும் கொரோனா  தொற்று இல்லை என்பதும் உறுதியானது கவனிக்கத்தக்கது.