ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலை இல்லை: திருநாவுக்கரசர்

 

ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலை இல்லை: திருநாவுக்கரசர்

ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலை இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

டெல்லி: ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலை இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிகழும் உட்கட்சி பூசல் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் குறித்து முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து பேசி வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வர முடியாது என்றார்.

இதையடுத்து, திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.  யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்து குறித்து பதிலளித்த அவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல. எனக்கு கட்சிதான் முக்கியம் என்றார்.