ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழத்தான் விரும்புவார்கள்! – வெங்கையா நாயுடு கண்டுபிடிப்பு

 

ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழத்தான் விரும்புவார்கள்! – வெங்கையா நாயுடு கண்டுபிடிப்பு

ஈழப் போர் காரணமாக இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் வெளியேறி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகின் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அங்கு குடியுரிமை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மற்றவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்குத் திரும்பவே முடியாது என்ற நிலையில் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் சென்று வசித்து வருகின்றனர்.ஆனால், ஈழத் தமிழர்கள் இலங்கையில் வாழத்தான் விரும்புவார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஈழப் போர் காரணமாக இலங்கையிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் வெளியேறி கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகின் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அங்கு குடியுரிமை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மற்றவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.இந்தியாவுக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் வாழ வழியின்றி புலம்பி வருகின்றனர். 

tamilargal

இந்த நிலையில் சென்னை ஐஐடி-யில் 2020 முதல் 2030 வரை இந்தியா என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்த கலந்துரையாடலில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாகப் படித்து, அதன் பின்னணியைப் புரிந்துகொண்டு, ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் மக்கள் தங்கள் செயல்களை வெளிப்படுத்த வேண்டும்.
மக்களிடையே ஆதரவு பெற முடியாத சிலர் சுய லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தி மக்களைத் திரட்டுகின்றனர். தலைவர்களாக உருவெடுக்க சிலர் பணம்,சாதி,குற்றப்பின்னணி, மதம் ஆகியவற்றை எளிய வழியாக பார்க்கின்றனர். 
இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழ விரும்புகிறார்கள்.இந்தியாவில் அகதிகளாக வாழ அவர்கள் விரும்ப மாட்டார்கள்” என்றார்.

tamilans

இலங்கையில் கோத்தபய, மஹிந்த ராஜபக்சே ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று பகீர் அறிவிப்பை வெளியிட்டு, தமிழர்களுக்கு எதிரான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்கள் இலங்கைக்குத் திரும்புவார்கள் என்று குடியரசு துணைத் தலைவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வருபவர்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்பமாட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.