ஈழத்தமிழர்கள் குறித்துப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

 

ஈழத்தமிழர்கள் குறித்துப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாக நாடகம் ஆடும் கட்சி திமுக  தான். கருணாநிதி சொன்ன வார்த்தையை நம்பி வந்த ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று சேலம் மாவட்டம் காமலாபுரம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ‘உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுகவுக்குத் திராணி உள்ளதா, தில்லு உள்ளதா என்றும் தேர்தலைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தான் மு.க ஸ்டாலின் அனைத்தையும் செய்து வருகிறார்’ என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் ஆர்வத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நாளை அவர்கள் அளித்த மனுவை திரும்பப்பெற்றுக் கொள்வார்கள்’ என்று கூறினார். 

ttn

இதனையடுத்து, ‘குடியுரிமை சட்டம் தொடர்பாக மோடியும் அமித்ஷாவும் விளக்கம் அளித்து விட்டனர். இதனால், இந்தியாவில் வசிக்கும் அனைத்து விதமான மதத்தினருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று நான் பிரதமரை சந்தித்த போது கூட கோரிக்கை வைத்தேன். இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாக நாடகம் ஆடும் கட்சி திமுக  தான். கருணாநிதி சொன்ன வார்த்தையை நம்பி வந்த ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் தான் கருணாநிதியும், ஸ்டாலினும். இதனால், ஈழத்தமிழர்கள் குறித்துப் பேச திமுகவுக்கு தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை’ என்று கூறினார்.