ஈரான் தாக்குதலால் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிந்தது….

 

ஈரான் தாக்குதலால் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிந்தது….

அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 52 புள்ளிகள் குறைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஈராக்கின் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானி உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை  குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதம் என்ற அளவுக்கே இருக்கும் என மத்திய புள்ளியல் மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

ஜி.டி.பி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ்பைனான்ஸ், நெஸ்லே இந்தியா மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எல் அண்டி டி, ஓ.என்.ஜி.சி., டைட்டன், சன்பார்மா மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,014 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,444 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.79 லட்சம் கோடியாக குறைந்தது.

சென்செக்ஸ், நிப்டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.73 புள்ளிகள் குறைந்து 40,817.74 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 27.60 புள்ளிகள் சரிந்து 12,025.35  புள்ளிகளில் நிலை கொண்டது.