ஈரான் அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் – டிரம்ப் பேட்டி

ஈரான் அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் – டிரம்ப் பேட்டி

ஈரான் நாட்டு அதிபரிடம் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இரு நாடுகளுக்கிடையே உள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா நிறுத்தியது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. 

trump

அதையடுத்து, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் பங்கேற்க கூடாது. அதை மீறினால் அவர்கள் மீது போர் தொடுக்க தயார் என அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டது.

தற்போது ஈரானிடம் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வரும் ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை சுமுகமாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யவும் தயார் என குறிப்பிட்டுள்ளது.

trump

பிரான்ஸ் அதிபர் இது குறித்து ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபரிடம் பேசினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், ஏதுவான சூழ்நிலை அமைந்தால் நிச்சயம் ஈரான் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறினார். மேலும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள நாங்கள் தயார். கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும். 

மேலும் ஈரான் அதிபர் ஒப்புக்கொண்டால் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.