ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு பரவும் கரோனா வைரஸ்!

 

ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு பரவும் கரோனா வைரஸ்!

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லையை தஃப்தான் எல்லைப் பகுதியில் கடக்கின்றனர். இருப்பினும், கொரோனா வைரஸிற்கான ஸ்கிரீனிங் கருவி குவெட்டா விமான நிலையத்தில் மட்டுமே கிடைக்கிறது.

 

பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான தஃப்தான் எல்லையில் வைரஸைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்க்ரீனிங் கருவி மற்றும் ஊழியர்கள்பற்றாக்குறையால் கொரோனா வைரஸ் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு பரவலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் அறிக்கையின்படி, தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லையை தஃப்தான் எல்லைப் பகுதியில் கடக்கின்றனர். இருப்பினும், கொரோனா வைரஸிற்கான ஸ்கிரீனிங் கருவி குவெட்டா விமான நிலையத்தில் மட்டுமே கிடைக்கிறது.

corona-in-pakistan

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. கரோனா வைரஸால் ஈரானில்  ஐந்து பேர் இறந்திருப்பதாக ஈரானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் மேலும் 18 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலும் எல்லைக் கடப்பு பகுதிகளிலும் அதிக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளது, வைரஸ் பரவலை கண்காணிக்க ஊழியர்கள் குறைந்த அளவில் இருப்பதால் மத்திய சுகாதார நிறுவனம் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முடிந்ததும் கண்காணிப்பு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சரவை தெரிவித்தது.