ஈராக்கில் தொடர்ந்து வெடிக்கும் போராட்டம் – பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!

 

ஈராக்கில் தொடர்ந்து வெடிக்கும் போராட்டம் – பலி எண்ணிக்கை 320 ஆக உயர்வு!

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஒருமாத காலத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்திருக்கிறது.

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஒருமாத காலத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்திருக்கிறது.

ஈராக் நாட்டில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் பலர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதற்க்காக அந்நாட்டு அரசின் கையாலாகாத தன்மையை எதிராக பொது மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Iraq

இந்த போராட்டத்தை ஆரம்பத்திலேயே அடக்கி விடலாம் என்ற முனைப்பில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க முற்பட்டனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதில் வன்முறை வெடித்ததால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கண்டு அதிர்ந்த ஏனைய பொதுமக்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அதன்பிறகு போராட்டம் உச்சம் பெற்றது. 

ஈராக்

போராட்டகரர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை பயன்படுத்தியது ஈராக் அரசு. இருப்பினும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தில், துப்பாக்கிச்சூடு நடந்து முதியோர்கள் மாணவர்கள் உட்பட பலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈராக்

குறிப்பாக, தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களை அடக்குவதற்காக போலீசார் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் 6 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சிதறடித்த ஓடிய பொதுமக்களில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.