ஈராக்கில் துப்பாக்கிச்சூடு – பொதுமக்கள் 5 பேர் சுட்டுக்கொலை

 

ஈராக்கில் துப்பாக்கிச்சூடு – பொதுமக்கள் 5 பேர் சுட்டுக்கொலை

ஈராக்கில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

ஈராக்கில் நாளுக்குநாள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவை அந்நாட்டில் அதிகரித்துள்ளது.

ஈராக்கில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

ஈராக்கில் நாளுக்குநாள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவை அந்நாட்டில் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

iraq

இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நேற்று ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் திரளாக  கூடியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்ய காவல்துறையினர் துவக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒத்துழைக்காததால், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். 

இதனிடையே வன்முறை வெடித்ததால், காவல்துறையினருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பாக்தாதில் தற்போதுவரை அமைதியை நிலவ பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை கொத்தாக கைது செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

-vicky