இஸ்லாம் போதிக்கும் தர்மம் எது?

 

இஸ்லாம் போதிக்கும் தர்மம் எது?

பூமியில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும் எல்லா மதங்களுமே மனிதர்களை அன்பை நோக்கி தான் வழிநடத்துகிறது. சில சுயநலமான மனிதர்களால் தான் மனிதர்களுக்கு மதம் பிடித்து அவர்களது வாழ்க்கையையும் நரக குழியில் தள்ளிக் கொண்டு அடுத்தவர்களின் வாழ்க்கையையும் நாசம் செய்கிறார்கள்.

இன்முகம் காட்டுவதே ஒரு தர்மம் என்று இஸ்லாம் சொல்கிறது. அதனால் வன்மையான வார்த்தைகளை விலக்கி விடுங்கள். எப்போதும் எவரிடத்தும் இனிமையாய் பேசுங்கள். அது உங்களுக்குள் எப்பொழுதும் மகிழ்வைக் கொண்டு வரும். மேலும், வாழ்வில் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க வெற்றி வேண்டுமானால், எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருக்கவேண்டும். அதை தவிர்த்து மன இறுக்கத்துடன் இருந்தால் அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடும்  முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்து தான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து உங்களின் மகிழ்ச்சியான முகத்தை இழந்து விடாதீர்கள்.  

Islam

நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.அந்த மகிழ்ச்சியானது வெளியில் இருந்து வருவதில்லை. உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எப்படி கடவுளை வெளியில் தேடாமல், உங்களுக்குள்ளேயே தேடி கண்டடைவீர்களோ அதோ போல்,  மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றி விடும். கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் உங்களது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றும். எப்போதும் மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்!