இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து:  பாஜக பிரமுகர் அதிரடி கைது!

 

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து:  பாஜக பிரமுகர் அதிரடி கைது!

தமிழக பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:  பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக பாஜக நிர்வாகி கல்யாணராமன் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் திராவிட சித்தாந்தங்களைக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார். மேலும் பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கல்யாணராமன் மீது வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து இன்று காலை அகமதாபாத்லிருந்து சென்னை திரும்பிய கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.