இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா, மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு

 

இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா, மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு

இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா, மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெக்கா: இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா, மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள சுற்றுப்புறங்களில் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஆனால் அந்த நகரங்களில் ஊரடங்கு உத்தரவு முன்பு பிற்பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது.

ttn

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்தபட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற வளைகுடா அரபு நாடுகள் அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களைக் கொண்ட மாவட்டங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உணவு வாங்குவதற்கும் மருத்துவ சேவையை அணுகுவதற்கும் உட்பட சில விதிவிலக்குகளை சவுதி உள்துறை அமைச்சகம் விதித்தது.

கார்களில் ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ய வேண்டும். சவுதி அரேபியாவில் 1,885 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  இங்கு ஏற்கனவே சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பொது இடங்களை மூடப்பட்டது மற்றும் உள்ளூர் இயக்கத்தை பெரிதும் தடைசெய்தது.