இஸ்லாமியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; என்ன நடக்கிறது இலங்கையில்?!…

 

இஸ்லாமியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; என்ன நடக்கிறது இலங்கையில்?!…

இலங்கையில் பவுத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என நான்கு மதத்தை சார்ந்தவர்களும் இருக்கின்றனர். இதில் பவுத்தர்கள் 70.2%, இந்துக்கள் 12.6%, இஸ்லாமியர்கள் 9.7% மற்றும் கிறிஸ்தவர்கள் 7.4% முறையே இருக்கின்றனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு இஸ்லாமிய வெறுப்பை அதிகரித்துள்ளது. ஈஸ்டர் அன்றும் அதைத் தொடர்ந்தும் 9 இடங்களில் குண்டு வெடித்தது, இதில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள்தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

dvDS

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்க உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இது உளவுத்துறையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்தது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருப்பதாக ஒரு ஊடகத்தின் மூலம் மற்ற ஊடகங்களுக்கு செய்தி பரவி வருகிறது.

இலங்கையில் பவுத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என நான்கு மதத்தை சார்ந்தவர்களும் இருக்கின்றனர். இதில் பவுத்தர்கள் 70.2%, இந்துக்கள் 12.6%, இஸ்லாமியர்கள் 9.7% மற்றும் கிறிஸ்தவர்கள் 7.4% முறையே இருக்கின்றனர்.

isis

இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது என்ற தகவலுடன் இது கிறிஸ்ட்சர்ச்சில் மசூதி தாக்கப்பட்டதற்கான முன்னெடுப்பு என்ற செய்தியும் பரவி வருகிறது. தேவாலயங்கள் மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் ஒரு கிறிஸ்தவன் மசூதியில் இருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு, கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவாக இருக்கும் இலங்கையை தேர்ந்தெடுத்து ஏன் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பழிவாங்க வேண்டும் என்ற கேல்வி எஞ்சி நிற்கிறது.

rohingya

ரோகிங்கியா இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொலை செய்த பவுத்தர்கள் மீது இல்லாத வெறுப்பு, கிறிஸ்தவர்கள் மீது இருப்பதாக இந்த பிரச்சனையை குறுகலான வட்டத்துக்குள் அடைக்கின்றனர்! இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை விரட்ட பவுத்தர்களால் நிகழ்த்தப்படும் சதியாகவும் இதை ஒரு சாரார் பார்க்கின்றனர்.

இஸ்லாமியர்கள் தற்போது அதிகமாக கைது செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள அப்பாவி இஸ்லாமியர்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகின்றனர். இந்த வேலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதி என்பது போல் இஸ்லாமிய வெறுப்பை விதைப்பது அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை அதிகரிப்பதாக இருக்கும். எனவே தெளிவான தகவல்களின்றி செய்தி பரப்ப வேண்டாம் என இலங்கை மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: முன்னாள் முதல்வர் மகன் கொலை: சொத்துக்காக மனைவியே கொன்றதாக பகீர் தகவல்?!