இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கூட்டம்…நடிகர் ராஜ் கிரண் காட்டமான பதிவு!

 

இஸ்லாமியர்களை  தனிமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கூட்டம்…நடிகர் ராஜ் கிரண் காட்டமான பதிவு!

இருந்து பதினையாயிரம் ரூபாய் அளவில் தான், பள்ளிவாசல்களில் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.

நடிகர் ராஜ்கிரணை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஹீரோவென்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தவர்களில் இவரும்  ஒருவர். கரடுமுரடான தோற்றத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.  அதே சமயம் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் ராஜ் கிரண் பதிவிடுவதை  மறப்பதில்லை. 

 

இந்நிலையில் நடிகர் ராஜ் கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஆலிம் பெருமக்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், கருத்து வேறுபாடுகளை களைந்தெறிய வேண்டியது ஒற்றுமையின் முதல் படியாகும்…ஹலால் என்றால், அனுமதிக்கப்பட்டது, ஹராம் என்றால், தவிர்க்க வேண்டியது என்று பொருள் கொள்ளலாம்… எது ஹலால், எது ஹராம் என்று நிர்ணயிப்பதில் தான், மார்க்க அறிஞர்களுக்குள்ளேயே ஒத்த கருத்து இருப்பதில்லை… காரணம், திருக்குர்ஆனையும்,நபிகள் பெருமானாரின் வாழ்க்கை தத்துவங்களையும், பூரணமாக புரிந்து கொள்வதென்பது, எவ்வளவு பெரிய அறிஞர்களுக்கும் மிகப்பெரிய சவாலே… புரிந்து கொண்டால், அது மிகப்பெரும் இறையருள்… அப்படிப்பட்ட பாக்கியம் எல்லா ஆலிம்களுக்கும் கிடைத்து, அவற்றை போதிப்பதற்கான சுதந்திரமான சூழலும் அமைந்திருந்தால், இஸ்லாமிய சமுதாயம், இன்றுள்ளது போல் கைசேதப்பட்டு நிற்காது. மிகுந்த மேன்மை அடைந்திருக்கும்… ஆலிம்கள் எனப்படும்,மார்க்க அறிஞர்கள் மீது எந்தத்தவறும் யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களில் நேர்மையானவர்கள், சூழ்நிலைக்கைதிகளாகிப்போனார்கள்… (நபிகள் நாயகம் அவர்கள், “தனது வாரிசுகள்” என்று அறிவித்த,ஆலிம் பெருமக்களுக்கு,நாம், உரிய மரியாதையும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் கூட, முறையாக கொடுப்பதில்லை. உத்தேசமாக, ஐயாயிரத்தில் இருந்து பதினையாயிரம் ரூபாய் அளவில் தான்,
பள்ளிவாசல்களில் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.

அதனால் தான், ஆலிம்களுக்கு லஞ்சம் கொடுத்து, எப்படியும் திருப்பிக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், இந்த ஊதியத்தை வைத்து, மன உளைச்சல் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்த முடியும்…? இப்படியான மன உளைச்சல்களோடு, இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத, பெரும்பான்மையான பள்ளிவாசல்களில், “வசதியானவர்கள்” என்ற ஒரே காரணத்துக்காக,
ஜமாஅத் தலைவர்களாகவும், முத்தவல்லிகளாகவும் இருப்பவர்களை மீறி, தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, ஒரு ஆலிம், உண்மையான இஸ்லாத்தை ஓங்கி ஒலிக்க முடியுமா…? அதனால் தான் நேர்மையான ஆலிம்கள் சூழ்நிலைக்கைதிகளாகிப்போனார்கள்.

tn

நேர்மையற்றவர்கள், சுயலாபத்துக்காக, குழப்பவாதிகளாகி, சமுதாயத்தை சீரழித்து விட்டார்கள்… பாமர மக்கள், பெரிய பாவங்களுக்குக்கூட மன்னிக்கப்படுவார்கள், ஆனால், ஆலிம்கள் சிறிய பாவங்களுக்குக்கூட, மிகக்கேவலமான முறையில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்,என்ற “இறை வசனத்தைக்கூட” மறந்து விட்டார்கள். இனிமேலாவது, நபிகள் நாயகம் அவர்களின் வாரிசுகளான, ஆலிம் பெருமக்களுக்கு, அவர்கள், இஸ்லாத்தை ஓங்கி ஒலிப்பதற்கான எல்லா வகையான சூழ்நிலைகளையும் ஏற்படுத்திக்கொடுத்து, உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தைநாடறியச்செய்து நலம் பெறுவோம்… வெகு மக்களின் மனதில் நம்மைப்பற்றி தவறான பிம்பத்தை உருவாக்கிக்காட்டி, நம்மை தனிமைப்படுத்த, முடிந்த வழிகளிலெல்லாம் முயற்சிக்கிறது ஒரு கூட்டம்…

மிக இக்கட்டான சூழலில் இருக்கும் நாம், நபிகள் பெருமானார் வாழ்ந்து காட்டிய வழி முறைகளை பின் பற்றி, ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து,நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்…’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.