இஸ்லாமியர்களுக்கு நன்றி சொன்ன எஸ்.வி.சேகர், நாராயணன்! – தங்களையே கிள்ளிப் பார்த்துக்கொள்ளும் நெட்டிசன்கள்

 

இஸ்லாமியர்களுக்கு நன்றி சொன்ன எஸ்.வி.சேகர், நாராயணன்! – தங்களையே கிள்ளிப் பார்த்துக்கொள்ளும் நெட்டிசன்கள்

சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இது பற்றி அரபு நாடுகளைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ளவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், அரபு நாடுகளிலிருந்துகொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்து எஸ்.வி.சேகர் பதிவிட்டிருப்பது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக உள்ளவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இது பற்றி அரபு நாடுகளைச் சேர்ந்த உயர் பதவியில் உள்ளவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், அரபு நாடுகளிலிருந்துகொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இஸ்லாமியர்கள் மீது சமூக ஊடகங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்

வகையில் அவர்களைப் பாராட்டி பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு காரணமே டெல்லியில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்ததுதான் என்று இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது அவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு தங்கள் ரத்தத்தை அளிக்கத் தயாராக உள்ளதாக முன்வரவே அவர்களுக்கு நன்றி தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். 
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் எஸ்.வி.சேகர் இன்று, “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை” என்று கூறியுள்ளார்.
அதே போல் பா.ஜ.க பேச்சாளர் நாராயணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா? 

திருப்பூரைச் சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம் மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க  தன்னுடைய  ‘ஊநீர்’ (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என முன்வந்துள்ளார். தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவர் என்பவர் “தான் மட்டுமல்ல தன்னுடன் பாதிக்கப்பட்ட அனைவருமே ‘ஊநீர்’ தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி” என்று கூறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க-வினர் இவ்வளவு நல்லவர்களா என்று பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.