இஸ்லாமியருக்கும் கிறித்தவருக்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணராக முடியும்; பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமியருக்கும் கிறித்தவருக்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணராக முடியும்; பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமியருக்கும் கிறித்தவருக்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணராக முடியும் என பாஜக அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே விமர்சித்துள்ளார்.

இஸ்லாமியருக்கும் கிறித்தவருக்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணராக முடியும் என பாஜக அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே விமர்சித்துள்ளார்.

அநாகரிகமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே. பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை எல்லை கடந்து தாக்குதல் நடத்தியது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். உத்தர கன்னடாவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே இதனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

hegde

இதுகுறித்து அவர், தேசமே நம் இந்திய விமானப்படையின் வீரத்தை பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ராகுல் காந்தி அதற்கு சாட்சி கேட்டு கொண்டிருக்கிறார். தன்னை பிராமணர் என கூறிக்கொள்ளும் அவரிடம் அதற்கான சாட்சி இருக்கிறதா. இஸ்லாமியருக்கும் கிறித்தவருக்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணராக முடியும், டிஎன்ஏ சோதனை செய்து ஆதாரத்தை காட்ட முடியுமா என விமர்சித்துள்ளார்.

அனந்த்குமார் இப்படி பேசுவது முதல்முறை அல்ல, இந்து பெண்களை தொட்டவனுக்கு கை இருக்கக் கூடாது, கர்நாடக காங்கிரஸ் தலைவர் இஸ்லாமிய பெண்ணின் பின்னால் சுற்றுகிறார் என பல சர்ச்சை கருத்துகளை பேசியவர்.