இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ட்ரைலர் வெளியானது!

 

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ட்ரைலர் வெளியானது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

கடந்த ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இப்படத்தை “புரியாத புதிர்” இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவிருக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இளைஞர்கள் ஆவலோடு இருக்கும் நேரத்தில், படத்தின் ட்ரைலர் வெளியானது.அதில் தற்போது தமிழ் திரைப்படங்களில் கெட்ட வார்த்தை பயன்படுத்துவது என்பது மிகவும் இயல்பாகி விட்டது. இப்படத்தின் டிரைலெர் தொடக்கத்திலேயே கெட்ட வார்த்தையில் இருந்து தான்.  ஷில்பா மஞ்சுநாத் மீது தீரா காதல் கொள்ளும் ஹரிஸ் கல்யான் அவரை விரட்டி விட்டி காதலிக்கிறார். தனக்கு மட்டும் அவர் காதலிக்கும் பெண் சொந்தம் என்கிற வசனத்தின் மூலம் அதை உறுதிபடுத்திக்கொள்ள முடிகிறது.

மேலும் இப்படத்தை பார்க்கும் போது தெலுங்கில் விஜய் தேவரைக்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் போலவே உள்ளதாக பலரும் சமூகவலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.